பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1300 

கொண்ட பொழுதே; விழைவு அற விதிர்த்து வீசி விட்டு எறிந்திடுவது ஒப்ப அதன் மேல் கொண்ட வேட்கை அறும்படி விட்டு அதனை அசைத்து வீசி யெறியுந் தன்மை போல; கழலவர் உள்ளம் அஞ்சிக் கலங்குமேல் - கழலணிந்த வீரரின் மனம் (தம் உடம்பின்மேல் உள்ள வேட்கையாலே) அச்சுற்றுக் கலங்கு மெனின்; அதனை வல்லே மழைமினின் நீக்கியிட்டு - அவ்வேட்கையை விரைந்து முகிலிடை மின்போல் (தோன்றியவாய் தெரியாமல்) நீக்கி மறைத்திட்டு; வன்கண்ணர் ஆப - அஞ்சாமையை உடையராவர்.

   (வி - ம்.) அது நுமக்கும் வேண்டும் என்றான்

   உழையினம், கழலவர் : எழுவாய்கள்.

   உழையினம் - மான்கூட்டம். கோடு - உச்சிக்கோடு கலங்குதல் உற்றபோதே என்றற்கு, உச்சியிலுள்ள கொம்பு அசைதலுற்ற பொழுதே எனினும் அமையும். விழைவு - பற்று. வீசிவிட்டெறிதல் : ஒருசொல். கழலவர் - மறவர் ஆப - ஆகுவர். அன்று, ஏ : அசைகள்

( 200 )
2302 தற்புறந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தாற்
கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர்த் தோய்வர்
பொற்றசொன் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கன்மே
னிற்பர்தம் வீரந் தோன்ற நெடும்புகழ் பரப்பி யென்றான்.

   (இ - ள்.) தன் புறம் தந்து வைத்த தலைமகற்கு - தம்மைப் பாதுகாத்து (இவர் இடுக்கண் வரின் உதவுவர் என்று) வைத்த தம் தலைவனுக்கு; உதவி வீந்தால் - அங்ஙனம் உதவி செய்து இறந்தால்; கற்பக மாலை சூட்டிக் கடி அரமகளிர்த் தோய்வர் - (சுவர்க்கம் புகுந்து) கற்பக மாலை சூட்டப்பெற்று, மணமுறும் வான மங்கையரைத் தழுவுவர்; தம் வீரம் தோன்ற நெடும் புகழ் பரப்பி - (இவ்வுலகிலும்) தம் வீரம் விளங்கப் பெறும் புகழைப் பரப்பி; பெற்ற சொல்மாலை சூட்டிப் புலவர்கள் புகழ - பொலிவுற்ற சொல்மாலையை அணிந்து புலவர்கள் புகழும்படியாக; கல்மேல் நிற்பர் - வீரக் கல்லிலே நிலைபெறுவர்.

   (வி - ம்.) புறந்தருதல் - உண்டி உறையுள் உடைமுதலியன வீந்து பாதுகாத்தல், தலைமகன் - அரசன், ”புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு, இரந்துகோள் தக்க துடைத்து” என்றார் வள்ளுவர், அச் சாக்காட்டால் எய்தும் பயன் இச்செய்யுளில் அழகுறக் கூறப்பட்டுள்ளது.

( 201 )
2303 பச்சிரும் பெஃகிட் டாங்குப்
  படையைக்கூர்ப் பிடுத லோடுங்
கச்சையுங் கழலும் வீக்கிக்
  காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்