பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1301 

2303 டச்சுற முழங்கி யாரா
  வண்ணலங் குமரன் கையு
ணச்செயிற் றம்பு தின்ன
  நாளிரை யாக லுற்றார்.

   (இ - ள்.) பச்சிரும்பு எஃகு இட்டாங்கு - உருகின இரும்பிலே எஃகு வைத்தாற் போல; படையைக் கூர்ப்பு இடுதலோடும் - அரிச்சந்தன் படைவீரரைக் கூர்மையிட்ட அளவிலே; கச்சையும் கழலும் வீக்கி-(அவ் வீரர்கள்) அரைக் கச்சையையும் வீரக் கழலையும் கட்டி; காஞ்சனத் தளிவம் வாய்க்கு இட்டு - பொற் சின்னம் வாயில் இட்டி; அச்சு உற முழங்கி ஆரா - அச்சம் உண்டாக முழங்கி ஆர்த்து; அண்ணல் குமரன் கையுள் - பெருமை மிக்க சீவகன் கையில்; நஞ்சு எயிற்று அம்பு தின்ன - நஞ்சு போன்ற பற்கள் உள்ள அம்புகளால் தின்னப்பட்ட; நாள் இரையாகல் உற்றார் - தம் வாழ்நாள் இரையாகலை மேற்கொண்டனர்.

   (வி - ம்.) பொற் சின்னத்தை வாயிலிட்டும் போரிடல் மரபு. அண்ணல் அம் குமரன் : அம் : அசை.

   பச்சிரும்பு - உருகிய இரும்பு. கூர்ப்பிடுதல் - தூண்டுதல். காஞ்சனத் தளிவம் - பொன்னாலாகிய சின்னம். அச்சுற -அச்சம் உண்டாகும்படி. ஆரா - ஆர்த்து, குமரன் : சீவகன், நாளிரை - நாட்காலத்துத் தின்னுமிரையுமாம். எயிறு - பல் . இது : இங்கு அம்பின் முனையை யுணர்த்தியது

( 202 )
2304 வடதிசை யெழுந்த மேகம்
  வலனுராய் மின்னுச் சூடிக்
குடதிசைச் சோ்ந்து மாரி
  குளிறுபு சொரிவ தேபோற்
படர்கதிர்ப் பைம்பொற் றிண்டோ்
  பாங்குற விமைப்பி னூர்ந்தா
னடர்சிலை யப்பு மாரி
  தாரைநின் றிட்ட தன்றே.

   (இ - ள்.) வடதிசை எழுந்த மேகம் - வடதிசையில் எழுந்த முகில்; வலன் உராய் - வலமாகச் சென்று; மின்னுச் சூடி - மின்னை அணிந்து; குடதிசைச் சேர்ந்து - மேலைத் திசையை அடைந்து; குளிறுபு மாரி சொரிவதே போல் - முழங்கி மழை பெய்வதைப் போல; படர் கதிர் பைம் பொன் திண்தேர் - பரவிய கதிரையுடைய பொன்னாலாகிய திண்ணிய தேரை; இமைப்பின் பாங்கு உற ஊர்ந்தான் - நொடியளவிலே அழகுற ஏறினான்; அடர்சிலை அப்பு மாரி தாரை நின்றிட்டது - (அப்போது)