மண்மகள் இலம்பகம் |
1303 |
|
|
தேர்பல முறியவும் - பொன்னாலான தேர்கள் பல முறியவும்; சிங்கம் போல் தொழித்து ஆர்த்து - சிங்கம்போற் சினந்து முழங்கி; அவன் சிறுவர் தேர்மிசைத் தோன்றினார் - கட்டியங்காரனின் மக்கள் தேர்மீது காணப்பட்டனர்.
|
(வி - ம்.) துளங்கு - அசைந்து. அலமர - அசைய. யானைகட்குக் குன்றுகள் உவமை. சங்கிற்குத் திங்கள் உவமை. மாநிரை குதிரையணி. தொழித்தல் - சினத்தல், அவன் என்றது கட்டியங்காரனை.
|
( 205 ) |
2307 |
சந்த னஞ்சொரி தண்கதிர்த் | |
திங்க ளந்தொகை தாம்பல | |
குங்கு மக்கதிர்க் குழவியஞ் | |
செல்வ னோடுடன் பொருவபோன் | |
மங்குன் மின்னென வள்ளறோ் | |
மைந்தர் தேரொடு மயங்கலின் | |
வெங்கண் வில்லுமிழ் வெஞ்சர | |
மிடைந்து வெங்கதிர் மறைந்ததே. | |
|
(இ - ள்.) குங்குமக் கதிர்க் குழவி அம் செல்வனோடு - குங்குமம் போலச் சிவந்த கதிர்களையுடைய இளஞாயிற்றுடன்; சந்தனம் சொரிதண் கதிர்த் திங்கள் அம் தொகை தாம்பல உடன் பொருவபோல் - சந்தனம் போலச் சொரியும் தண்ணிய கதிரையுடைய திங்களின் திரள்கள் தாம் பலவும் சேரப் பொருவன போல; மங்குல் மின்னென மைந்தர் தேரொடு வள்ளல் தேர் மயங்கலின் - முகிலிடை மின்போல மைந்தர்களின் தேருடன் சீவகன் தேரும் மயங்குதலின்; வெங்கண் வில்உமிழ் வெஞ்சரம் மிடைந்து - கொடிய வில் உமிழ்கின்ற கொடுங் கணைகள் நெருங்கலாலே; வெங்கதிர் மறைந்தது - ஞாயிறு மறைந்தது.
|
(வி - ம்.) தண்கதிர்த் திங்கள் தொகை கட்டியங்காரன் மக்களுக்கு உவமை. கதிர்க்குழவியஞ் செல்வன் - (ஞாயிறு) சீவகனுக்குவமை. வள்ளல் : சீவகன். வெங்கதிர் - ஞாயிறு.
|
( 206 ) |
2308 |
குருதி வாளொளி யரவினாற் | |
கொள்ளப் பட்டவெண் டிங்கள்போற் | |
றிருவ நீர்த்திகழ் வலம்புரி | |
வாய்வைத் தாங்கவன் றெழித்தலும் | |
பொருவில் கீழ்வளி முழக்கினாற் | |
பூமி மேற்சன நடுங்கிற்றே | |
யரவ வெஞ்சிலை வளைந்ததே | |
யண்ணல் கண்ணழ லுமிழ்ந்ததே. | |
|