பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1304 

   (இ - ள்.) குருதி வாள் ஒளி அரவினால் - குருதியைப் போலும் மிக்க ஒளியையுடைய செம் பாம்பினாலே; கொள்ளப் பட்ட வெண் திங்கள் போல் - பற்றப்பட்ட வெள்ளைத் திங்கள் போலே; திருவ நீர்த் திகழ் வலம்புரி வாய் வைத்து ஆங்கு அவன் தெழித்தலும் - அழகிய நீர்மையுடைய வலம்புரியைக் கையிற் பற்றி வாயில் வைத்துச் சீவகன் முழக்கின அளவிலே; பொரு இல் கீழ் வளி முழக்கினால் - உவமையில்லாத, கீழ் நோக்கி யெழுந்த காற்றின் முழக்காலே; பூமிமேல் சனம் நடுங்கிற்று - நிலவுலகில் மக்கள் கூட்டம் நடுங்கியது; அரவ வெஞ்சிலை வளைந்தது - அரவ மனைய கொடிய வில்லும் வளைந்தது; அண்ணல் கண் அழல் உமிழ்ந்தது - சீவனுடைய கண்களும் தீயைச் சொரிந்தன.

   (வி - ம்.) திருவ: அ: அசை. 'திருத்திகழ்ந்த அக்கடலும்' ஆம்.

   குருதிவாளொளியரவு என்றது கேதுவினை. சீவகன் கைக்குச் செம்பாம்பும் சங்கத்திற்குத் திங்களும் உவமை. அவன்:சீவகன். சனம் - மக்கட்டிரள். அரவம் போன்ற வெஞ்சிலை என்க. அண்ணல் : சீவகன்.

( 207 )
2309 கங்கை மாக்கடற் பாய்வதே
  போன்று காளைதன் கார்முக
மைந்த ரார்த்தவர் வாயெலா
  நிறைய வெஞ்சரங் கான்றபி
னெஞ்சம போழ்ந்தழ லம்புண
  நீங்கி னாருயிர் நீண்முழைச்
சிங்க வேறுகள் கிடந்தபோற்
  சிறுவர் தோ்மிசைத் இஞ்சினார்.

   (இ - ள்.) கங்கை மாக்கடல் பாய்வதே போன்று - கங்கை பெரிய கடலிலே பல முகமாகப் பாய்வதைப் போல; காளை தன் கார்முகம் மைந்தர் ஆர்த்தவர் வாய்எலாம் நிறைய - சீவகனுடைய வில்லானது வீரர்களாக ஆரவாரித்தவர் வாய்களிலெல்லாம் நிறையுமாறு; வெஞ்சரம் கான்றபின் - கொடிய கணைகளைச் சொரிந்தபின்; நெஞ்சம் போழ்ந்து அழல் அம்பு உண - (சில அம்புகள்) அவர்களின் நெஞ்சத்தைப் பிளந்து அழற் கணைகள் உண்டதனால்; உயிர் நீங்கினார் - உயிர் நீங்கியவர்களாய், நீள் முழைச் சிங்க ஏறுகள் கிடந்த போல் - நீண்ட குகைகளிலே ஆண் சிங்கங்கள் கிடந்தனபோல; சிறுவர் தேர்மிசைத் துஞ்சினர் - கட்டியங்காரன் மக்கள் தேரிலே பட்டுக் கிடந்தனர்.

   (வி - ம்.) நீங்கினார் : வினையெச்ச முற்று. இதுவரை கட்டியங்காரற்குத் துணைவந்த அரசருடனும், அவன் படைத்தலைவருடனும்