பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1305 

   அவன் புதல்வர் அணி வகுத்து வந்தவருடனும் சீவகன் பொருதவடி கூறினார்.

( 208 )
2310 நிவந்த வெண்குடை வீழவும்
  வேந்தர் நீள்விசும் பேறவு
முவந்து பேய்க்கண மாடவு
  மோரி கொள்ளைகொண் டுண்ணவுங்
கவந்த மெங்கணு மாடவுங்
  களிறு மாவொடு கவிழவுஞ்
சிவந்த சீவக சாமிகண்
  புருவ மும்முரி முரிந்தவே.

   (இ - ள்.) நிவந்த வெண்குடை வீழவும் - உயர்ந்த வெண்குடை வீழவும்; வேந்தர் நீள் விசும்பு ஏறவும் - அரசர்கள் பெரிய வானிலே செல்லவும்; உவந்து பேய்க்கணம் ஆடவும் - மகிழ்ந்து பேய்க்கூட்டம் ஆடவும்; ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும் - ஆண் நரி கொள்ளையாகக் கொண்டு உண்ணவும்; கவந்தம் எங்கணும் ஆடவும் - குறைத்தலைகள் எங்கும் ஆடவும்; களிறு மாவொடு கவிழவும் - யானைகள் குதிரைகளுடன் கவிழவும்; சிவந்த சீவக சாமிகண் புருவமும் முரிமுரிந்த - சீவக சாமியின் கண்களும் சிவந்தன; புருவங்களும் வளைந்தன.

   (வி - ம்.) இது முதலாகப் பதுமயூகம் வகுத்து நின்ற கட்டியங்காரனுடன் சீவகன் பொருதமை கூறுகின்றார்.

   எச்சங்கள் எதிர் காலம் நோக்கின; குறையாகிய தலையை உடையதனைக் குறைத்தலை என்றது ஆகுபெயர். அவன் படை வகுப்பைக் கண்டு சீவகற்குக் கோபம் நிகழ்ந்தமை கூறினார். 'முரிமுரிந்த' என்பதனை, 'அணியலும் அணிந்தன்று' (புறநா. - கடவுள் வாழ்த்து) என்றாற் போலக் கொள்க.

( 209 )
2311 பொய்கை போர்க்களம் புறவிதழ்
  புலவு வாட்படை புல்லித
ழைய கொல்களி றகவித
  ழரச ரல்லிதன் மக்களா
மையில் கொட்டையம் மன்னனா
  மலர்ந்த தாமரை வரிசையாற்
பைய வுண்டபின் கொட்டைமேற்
  பவித்திரத் தும்பி பறந்ததே.

   (இ - ள்.) பொய்கை போர்க்களம் - பொய்கை பொருங் களமாகவும்; புறஇதழ் புலவு வாள்படை - புறவிதழ் வாட்படை