மண்மகள் இலம்பகம் |
1306 |
|
|
யாகவும்; புல் இதழ் ஐய கொல் களிறு - அதற்குள் ளிருக்கும் புல்லிதழ் வியத்தகு கொல்களிறாகவும்; அகஇதழ் அரசர் - அகவிதழ் அரசராகவும்; அல்லி தன் மக்கள் ஆ - அல்லி யிதழ் அவன் மக்களாகவும்; மைஇல் கொட்டை அம் மன்னன் ஆ - குற்றமற்ற கொட்டை அக் கட்டியங்காரனாகவும்; மலர்ந்த தாமரை வரிசையால் - விரிவுற்ற ஒரு பதும வியூகத்தை; பைய உண்ட பின் - முறையே மெல்ல உண்டதன் பிறகு; கொட்டைமேல் பவித்திரத் தும்பி பறந்தது - அக் கொட்டை மேலே தும்பி பறந்தது.
|
(வி - ம்.) குலனும் குணனும் முதலியன தூயன் என்பது தோன்றப், 'பவித்திரத் தும்பி' என்றார்.
|
( 210 ) |
வேறு
|
2312 |
கலைமுத்தங் கொள்ளு மல்குற் | |
கார்மழை மின்ன னார்த | |
முலைமுத்தங் கொள்ளச் சாந்த | |
மழிந்துதார் முருகு விம்மு | |
மலைமுத்தங் கொள்ளு மார்பின் | |
மன்னனுங் கண்டு காய்ந்தான் | |
சிலைமுத்தங் கொள்ளுந் திண்டோட் | |
செம்மலுந் தீயிற் சேந்தான். | |
|
(இ - ள்.) கலைமுத்தம் கொள்ளும் அல்குல் - மேகலை முத்தம் கொள்ளும் அல்குலையுடைய; கார்மழை மின்னனார்தம் முலை முத்தம் கொள்ள - கரிய முகிலிலே தோன்றும் மின் போன்ற மகளிரின் முலைகள் தழுவுதலால்; சாந்தம் அழிந்து தார் முருகு விம்மும் - சந்தனம் அழிந்து தாரில் தேன் பொங்குகின்ற; மலைமுத்தம் கொள்ளும் மார்பின் - மலைபோன்ற மார்பினையுடைய; மன்னனும் கண்டு காய்ந்தான் - கட்டியங்காரனும் சீவகனைக் கண்டு சீறினான்; சிலைமுத்தம் கொள்ளும் திண் தோள் செம்மலும் தீயின் சேந்தான் - வில்பொருந்தும் தோளையுடைய சீவகனும் அவனைக் கண்டு தீயைப் போலச் சினந்தான்.
|
(வி - ம்.) கலை - மேகலையணி. தார் - மாலை. முருகு - மணம். மலைமுத்தங்கொள்ளும் மார்பின் என்புழி முத்தங்கோடல் - பொருந்துதல் என்பதுபட நின்றது. மன்னன் : கட்டியங்காரன். செம்மல் : சீவகன்.
|
( 211 ) |
2313 |
தன்மதந் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம் | |
பின்மதஞ் செறித்திட்டு டஞ்சிப் பிடிமறந் திரிந்து போகும் | |
வென்மதக் களிற்று வெய்ய வசனிவே கத்தின் மேலான் | |
மின்னுமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பி னானே. | |
|