| மண்மகள் இலம்பகம் |
1308 |
|
|
|
(இ - ள்.) அகப்படு பொறியினாரை ஆக்குவார் யாவர்? - நின் கையிலே அகப்படுதற்குக் காரணமான தீவினையுடையாரை ஆக்குவார் எவர்?; மிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்யல் ஆமோ? - அதற்கு வேண்டும் நல்வினை உடையாரை வீணராக ஆக்கல் ஒவ்வுமோ?; நகைக் கதிர் மதியம் வெய்துஆ நடுங்கச் சுட்டிடுதல் உண்டே? - ஒளியுறுங் கதிரையுடைய திங்கள் வெப்பமுடையதாகி வருந்தச் சுடுதல் ஆமோ!; பகைக் கதிர்ப் பருதி சந்தும் ஆலியும் பயத்தல் உண்டே? - வெங்கதிரையுடைய ஞாயிறு சந்தனமும் பனிக் கட்டியும் கொத்தல் உண்டோ?
|
|
(வி - ம்.) தன் மக்கள் சீவனிடம் அகப்பட்டதும், சீவகன் ஆக்கமுடைய னாதலின் தன் கையிலகப்படாததும், தன் மக்களாற் கொல்லப் படாததும் கருதி இங்ஙனங் கூறினான். ஞாயிறும் திங்களும் தம் தன்மை திரியாமையின் நல்வினை தீவினைகளும் தம் பயனைப் பயந்தேவிடும் என்றான். 'பகைக் கதிர்' என்றது திங்களுக்குப் பகையென்று கருதி.
|
( 214 ) |
| 2316 |
புரிமுத்த மாலைப் போற்கோல் | |
விளக்கினுட் பெய்த நெய்யுந் | |
திரியுஞ்சென் றற்ற போழ்தே | |
திருச்சுடர் தேம்பி னல்லா | |
லெரிமொய்த்துப் பெருக லுண்டோ | |
விருவினை சென்று தேய்ந்தாற் | |
பரிவுற்றுக் கெடாமற் செல்வம் | |
பற்றியா ரதனை வைப்பார். | |
|
|
(இ - ள்.) புரிமுத்த மாலைப் பொன்கோல் விளக்கினுள் - கட்டிய முத்து மாலையையுடைய பொன்னாலாகிய தண்டையுடைய விளக்கிலே; பெய்த நெய்யும் திரியும் சென்று அற்ற போழ்தே - வார்த்த நெய்யும் திரியும் வற்றி மாண்டபொழுதிலேயே; திருச்சுடர் தேம்பின் அல்லால் எரி மொய்த்துப் பெருகல் உண்டோ? - அழகிய விளக்கு அவிதல் அன்றி நெருப்புச் செறிந்து மிகுதல் உண்டோ? (அதுபோல); இருவினை சென்று தேய்ந்தால் - பெரிய நல்வினை வற்றி மாண்டால்; செல்வம் பரிவு உற்றுக் கெடாமல் - செல்வம் வருந்திக் கெடாதபடி; அதனை யார் பற்றி வைப்பார் - அதைப் பிடித்து வைப்பவர் எவரும் இல்லை.
|
|
(வி - ம்.) முன்னே, ”மொய்யமர் பலவும் வென்றான்” (சீவக. 205) தன் புதல்வர் தன்னைச் சூழப்பட்டுக் கிடக்கின்றமை கண்டும் செற்றம் மிகுந்து மேற்செல்லாது இங்ஙனம் கூறினான் தான் அரச மரபு அன்மையின்.
|
( 215 ) |