பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 131 

   பயனிலாதோன்; இனிப் பயனின்மை செய்கின்ற குணத்துக்கு ஓதின் தீக்குணங்கட் குள்ளாகிய செய்ந்நன்றிக்கேடு தன்னை ஒப்பான் என்றுமாம்.

( 211 )
241 மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வ
மென்னை வந்திடங் கொண்டஃ திராப்பக
றுன்னி நின்று செகுத்திடு நீயெனு
மென்னை யான்செய்வ கூறுமி னென்னவே.

   (இ - ள்.) மன்னவன் பகையாயது ஒர் மா தெய்வம் என்னை இடம் கொண்டுவந்து - வேந்தனுக்குப் பகையாயதொரு பெரிய தெய்வம் என்னை நிலையமாகக் கொண்டுவந்து; அஃது இராப் பகல் துன்னி நின்று நீ செகுத்திடு எனும் - அஃது இரவும் பகலும் என்னை நெருங்கி யிருந்து நீ அரசனை ஒழித்திடு என்று கூறும்; யான் செய்வ என்னை கூறுமின் என்ன - அதற்கு யான் செய்யத் தகுவன யாவை ? கூறுவீராக என்று வினவ;

 

   (வி - ம்.) 'என்ன' என்பதனை, 'உட்கினரா' (சீவக. 242) என மேல் வருகின்றதனோடு முடிக்க. [இப் பாட்டும் அடுத்ததும் குளகம்]

( 212 )
242 அருமை மாமணி நாக மழுங்கவோ
ருருமு வீழ்ந்தென வுட்கின ராவவன்
கருமங் காழ்த்தமை கண்டவர் தம்முளான்
றரும தத்தனென் பானிது சாற்றினான்.

   (இ - ள்.) அருமை மாமணி அழுங்க நாகம் ஓர் உருமு வீழ்ந்தென உட்கினர் ஆ - அரிய பெருமைமிக்க மாணிக்கம் கெட நாகத்தின் மேலே ஓர் இடி வீழ்ந்தாற்போல அமைச்சர்கள் அஞ்சினராக; அவன் கருமம் காழ்த்தமை - கட்டியங்காரன் அரசனைக் கொல்லத் துணிந்ததை ; அவர் தம்முளான் தரும தத்தன் என்பான் கண்டு இது சாற்றினான் - அவர்களில் ஒருவனாகிய தருமதத்தன் என்கின்றவன் உணர்ந்து இதனைப் பலரறியக் கூறினான்.

 

   (வி - ம்.) மணி அரசனுக்கும் நாகம் அமைச்சருக்கும் 'செகுத்திடு' என்ற சொல் இடிக்கும் உவமை. காழ்த்தமை - கொல்லத் துணிந்தமை. 'ஆயவன்' என்ற பாடத்திற்கு அரசனால் ஆயவன் என்க.

( 213 )
243 தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்
குவளை யேயள வுள்ள கொழுங்கணா
ளவளை யேயமிர் தாகவவ் வண்ணலு
முவள கந்தன தாக வொடுங்கினான்.