| மண்மகள் இலம்பகம் |
1310 |
|
|
|
அம் சேறு ஆடிய கடக வண்கை - அவர்கள் கண்ணில் நிறைந்த அழகிய மையாகிய சேற்றை ஆடிய, கடகம் இட்ட கையிலே; வெம்சிலை கொண்டு - கொடிய வில்லை எடுத்து; வெய்ய உரும் என முழங்கிச் சொல்வான் - கொடிய இடிபோல ஆர்த்துக் கூறுவான்.
|
|
(வி - ம்.) மகளிரின் காலணியைத் திருத்திச் சிவந்த கை - அம் மகளிரின் கண்ணீரை மாற்றும்போது கண்ணிலுள்ள மை கண்ணீருடன் கலந்து சேறானதைத் துடைத்த கை - எனக் கூட்டுக. கட்டியங்காரன் கூறுகிறான்.
|
( 217 ) |
வேறு
|
| 2319 |
இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் | |
கொன்ற நெஞ்சிற் | |
புல்லாள னாக மறந்தோற்பி | |
னெனப்பு கைந்து | |
வில்வா ளழுவம் பிளந்திட்டு | |
வெகுண்டு நோக்கிக் | |
கொல்யானை யுந்திக் கடைமேலுமொர் | |
கோறொ டுத்தான். | |
|
|
(இ - ள்.) மறம் தோற்பின் - வீரத்தை யிழந்தேனெனின்; இல்லானை அஞ்சி விருந்தின் முகம் கொன்ற நெஞ்சின் - மனைவிக்கு அஞ்சி விருந்தினரின் முகத்தை மகிழச் செய்யாமல் விட்ட நெஞ்சையுடைய; புல்லாளன் ஆக என - இழிஞன் ஆகக் கடவேனென்று கூறி; புகைந்து - சீறி; வில்லாள் அழுவம் பிளந்திட்டு - வில்லாளர் நிறைந்த பரப்பைப் பிளந்து; வெகுண்டு நோக்கி - சினந்து பார்த்து; கொல்யானை உந்தி - கொல் களிற்றைச் செலுத்தி; குடைமேலும் ஓர் கோல் தொடுத்தான் - சச்சந்தனைக் கொன்ற பிழையின் மேலும் (பிழையாகச் சீவகனைக் கொல்லக் கருதி) ஒரு கணையைத் தொடுத்தான்.
|
|
(வி - ம்.) சச்சந்தனைக் கொன்று குடை கவித்தலின், குடையிட்டு நிற்பதன் மேலும் எனவே, அவனைக் கொன்றமை கூறிற்றாம். இனி, 'மேலும் வழங்கினானே' என்று பாடம் ஓதிச் சீவகன் எய்தமை பொறாது கட்டியங்காரன் அம்பு தொடுத்தான் என்பாரும் உளர்.
|
( 218 ) |
| 2320 |
தொடுத்தாங்க வம்பு தொடைவாங்கி | |
விடாத முன்ன | |
மடுத்தாங்க வம்புஞ் சிலையும்மத | |
னாணு மற்றுக் | |
|