மண்மகள் இலம்பகம் |
1313 |
|
|
(இ - ள்.) கட்டியங்காரன் என்னும் கலி அரசு அழிந்தது - கட்டியங்காரனென்கிற கலியாகிய அரசு வீழ்ந்தது; ஆங்குப் பட்ட இப் பகைமை நீங்கிப் படைத்தொழில் ஒழிக என்னா - (ஆகையால்) அப்போது உண்டான இம் மாறுபாடு விலகிப் போர்த்தொழிலை ஒழிக என்று; முரசம் கொட்டினர் - வெற்றி முரசு அறைந்தனர்; மள்ளர் ஆர்த்தனர் - (அது கேட்டு) வீரர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர்; மண்மகள் குருதிக்கண்ணீர் விட்டு அழுது - நிலமகளும் குருதியாகிய கண்ணீரைப் பெய்து அழுது; அவன்கண் ஆர்வம் நீக்கினாள் - அவனிடம் உள்ள காதலைக் கைவிட்டாள்.
|
(வி - ம்.) கலியாகிய அரசு என்க. அரசு-அரசன்: கட்டியங்காரன். என்னா - என்று. முரசங்கொட்டியனர் என்க. சிறிது காலம் தான் அவனுக்குத் தேவியாயிருந்தமையால் நிலமகள் அழுதனள். ”நிலமகள் அழத காஞ்சியுமுண்டே” என்றார் பிறரும்.
|
( 222 ) |
2324 |
ஒல்லைநீ ருலக மஞ்ச | |
வொளியுமிழ் பருதி தன்னைக் | |
கல்லெனக் கடலி னெற்றிக் | |
கவுட்படுத் திட்டு நாகம் | |
பல்பகல் கழிந்த பின்றைப் | |
பன்மணி நாகந் தன்னை | |
வல்லைவாய் போழ்ந்து போந்தொர் | |
மழகதிர் நின்ற தொத்தான். | |
|
(இ - ள்.) நாகம் ஒளி உமிழ் பருதி தன்னை - கேது என்னும் பாம்பானது ஒளியைச் சொரியும் ஞாயிற்றை; நீர் உலகம் அஞ்சக் கடலின் நெற்றி - கடல் சூழ்ந்த உலகம் அஞ்சுமாறு கடலின் முகட்டிலே; கல்லென ஒல்லைக் கவுள்படுத்திட்டு - கல்லென்னும் ஒலியுண்டாகக் கடுக வாய்க்கொண்டதனாலே; பல்பகல் கழிந்த பின்றை - பல நாட்கள் கழிந்த பிறகு; பல்மணி நாகந்தன்னை - பல மணிகளையுடைய அந்த நாகத்தை; வல்லை வாய் போழ்ந்து போந்து - விரைந்து வாயைப் பிளந்து வந்து; ஓர் மழகதிர் நின்றது ஒத்தான் - ஓர் இளஞாயிறு நின்றது போன்றான்.
|
(வி - ம்.) தன் புதல்வர்களுடன் பட்டான் என்பது தோன்றப் 'பல்மணி நாகம்' என்றார். 'மந்திரி மாநாகம் உடன் விழுங்கிற்று' (சீவக. 290) என்ற முன்னர்க் கூறியதனால், தந்தை புதல்வனாகப் பிறப்பான் என்னும் விதிபற்றி இவ்வாறு கூறினார்.
|
( 223 ) |