மண்மகள் இலம்பகம் |
1314 |
|
|
2325 |
கோட்டுமீன் குழாத்தின் மள்ள | |
ரீண்டினர் மன்னர் சூழ்ந்தார் | |
மோட்டுமீன் சூழாத்தி னெங்குந் | |
தீவிகை மொய்த்த முத்த | |
மாட்டுநீர்க் கடலி னார்த்த | |
தணிநகர் வென்றி மாலை | |
கேட்டுநீர் நிறைந்து கேடில் | |
விசயைகண் குளிர்ந்த வன்றே. | |
|
(இ - ள்.) கோட்டுமீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினார் - சுறா மீனின் குழாம்போல வீரர்கள் கூடினர்; மன்னர் ஈண்டினர் - அரசர்கள் சூழ்ந்தனர்; மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த - பெருமையுடைய விண்மீன் திரள்போல எங்கும் விளக்குகள் மொய்த்தன; முத்தம் ஆட்டும் நீர்க்கடலின் அணிநகர் ஆர்த்தது - முத்துக்களைத் தாலாட்டு்ம் நீரையுடைய கடல்போல அழகிய நகர் ஆரவாரித்தது; வென்றிமாலை கேட்டு கேடு இல் விசயை கண் - வெற்றிமாலையைக் கேட்டுக் குற்றமற்ற விசயையின் கண்கள்; நீர் நிறைந்து குளிர்ந்த - நீர் நிறைந்து குளிர்ந்தன.
|
(வி - ம்.) கனவு புணையாக இறந்துபடாது இருத்தலின், 'கேடு இல் விசயை' என்றார். அவன் புதல்வரைக் கொன்று அவனைக் கொல்வதால் 'ஒழுங்கு' என்றார்.
|
( 224 ) |
2326 |
அணிமுடி யரசர் மாலை | |
யழனுதி வாள்க ளென்னு | |
மணிபுனை குடத்தி னெய்த்தோர் | |
மண்ணுநீர் மருள வாட்டிப் | |
பணைமுலைப் பைம்பொன் மாலைப் | |
பாசிழைப் பூமி தேவி | |
யிணைமுலை யேக மாக | |
நுகரிய வெய்தி னானே. | |
|
(இ - ள்.) அணிமுடி அரசர் மாலை அழல்நுதி வாள்கள் என்னும் - அழகிய முடியையுடைய அரசர்களின் மாலையணிந்த அழல் பொருந்திய நுனியை உடைய வாட்கள் என்கிற; மணி புனை குடத்தின் - மணிகள் இழைத்த குடத்தினாலே; நெய்த்தோர் மண்ணுநீர் மருள ஆட்டி - குருதியாகிய மஞ்சன நீரை நன்றாக ஆட்டி ; பணைமுலைப் பைம்பொன் மாலைப் பாசிழைப் பூமிதேவி - பருத்த முலைகளையும் பைம்பொன் மாலையையும் பசிய அணிகலன்
|