(வி - ம்.) 'முடியினையும் மாலையினையும் குருதி தோய்ந்த வாள்களையும் உடைய நெருப்பினது கொழுந்தென்னும் அரசர் சீவகனை மணிபுனை குடத்தின் மண்ணும் நீராலே ஆட்ட' என்று பொருளுரைத்து இது வீராபிடேகம் என்பர் நச்சினார்க்கினியர். மற்றும், 'அரசரைக் கொண்டு வாள்களென்னும் குடத்தின் நெய்த்தோராகிய மண்ணும் நீராலே மண்மகளை யாட்டுவித்து அவளை எய்தினான் என்பாரும் உளர்' என்றும் உரைப்பர். இப்பொருட்கு, 'ஆட்டி' என்பதை, 'ஆட்ட' எனத்திரிப்பர்.
|
( 225 ) |