பூமகள் இலம்பகம் |
1318 |
|
|
பார்வையிட்டு; நியமம் முற்றி - களவேள்வி முதலியன முடித்து; கள்நாடி வண்டு பருகும் கமழ் மாலை - தேனையாராய்ந்து வண்டுகள் பருகும் மணங்கமழ் மாலை தூக்கப் பெற்ற; மூதூர்க்கண் ஆடு யானையவர் - பழம்பதியிலே வெற்றியையுடைய யானையையுடையவர்; கைதொழச் சென்று புக்கான் - கைகுவித்து வணங்கப் போய்ச் சேர்ந்தான்.
|
(வி - ம்.) கண்ணாடி, தன்னைச் சேர்ந்தவர் செயலாலே இருக்கு மாறுபோல, இம் மார்பும் தன்னைச் சேர்ந்த மகளிர் செயலாயே இருத்தலின், 'கண்ணாடி அன்ன மார்பன்' என்று இன்பச் சிறப்புக் கூறினார்; 'கையும் காலும் தூக்கத் தூக்கும் - ஆடிப்பாவை போல - மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே' என்றாற்போல; கண்ணாடிபோல முதுகு காட்டாத மார்பன் என்பாரும் உளர்; பகைவர் வீரத்தின் அழகை விளக்கும் மார்புமாம்.
|
( 1 ) |
2328 |
கூடார் புலியு முழைக்கோளரி யேறு மன்ன | |
கூடார் மெலியக் கொலைவேனினைந் தானை யேத்திக் | |
கூடார மாலைக் குவிமென்முலைக் கோதை நல்லார் | |
கூடார மாட மயில்போலக் குழீயி னாரே. | |
|
(இ - ள்.) கூடுஆர் புலியும் முழைக் கோளரி ஏறும் அன்ன - கூட்டிற் பொருந்திய புலியும் குகையில் விளங்கிய சிங்க வேறும் போன்ற; கூடார் மெலியக் கொலைவேல் நினைந்தானை ஏத்தி - பகைவர் தேயக் கொல்லுதற்குரிய வேலை ஏந்த எண்ணிய சீவகனைப் பாராட்டி; கூடு ஆரம் மாலைக் குவி மென்முலைக் கோதை நல்லார் - பொருந்திய முத்துமாலையை அணிந்த குவிந்த மென்முலையையும் கோதையையும் உடைய மகளிர்; கூடாரம் மாடம் மயில்போலக் குழீஇயினார் - கூடாங்களிலும் மாடங்களிலும் மயில்போலத் திரண்டனர்.
|
(வி - ம்.) 'கூட்டுப் புலியும் முழைக் கோளரியும் போன்ற பகைவர் என்றது சூரபன்மனையும் ஒழிந்த அவுணரையும்' என்றும், 'வேல் நினைந்தான்' முருகன் என்றும், ஈண்டு அம் முருகனைப் போன்ற சீவகனைக் குறிப்பதாகவும் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வுவமை கட்டியங்காரன் முதலியோர்க்குத் தகாதென்றெண்ணி மேலும், 'முருகன் என்று சீவகனுக்கு ஒருபெயர் கூறினார், 'திருமால் போந்தான்' (சீவக. 2369) என்று மேலும் கூறுவர்' என்பர்.
|
கூடாரம் - கூடகாரம்; நெற்கூடுகள்.
|
( 2 ) |
வேறு
|
2329 |
மாலைச் செற்றான் மக்களொ | |
டெல்லா முடனேயிம் | |
மாலைச் செற்றான் வைந்நுனை | |
யம்பின் னிவனென்பார் | |
|