| பூமகள் இலம்பகம் | 
1319  | 
 | 
  | 
| 2329 | 
மாலைக் கின்றே மாய்ந்தது |   | 
  மாயாப் பழியென்பார் |   | 
மாலைக் கேற்ற வார்குழல் |   | 
  வேய்த்தோண் மடநல்லார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மாலைச் செற்றான் மக்களொடு எல்லாம் - சச்சந்தனைக் கொன்ற கட்டியங்காரனையும் அவன் மக்களையும் எல்லோரையும்; உடனே இம்மாலை வைந்நுனை அம்பின் இவன் செற்றான் என்பார் - சேர இம்மாலைக் காலத்தே கூரிய முனையையுடைய அம்பினாலே இவன் கொன்றான் என்பார்; இன்றே மாலைக்கு மாயாப் பழி மாய்ந்தது என்பார். இன்றைக்கே குணமாலைக்கு இதுவரை மாயாத பழி மாய்ந்தது என்பார்; மாலைக்கு ஏற்ற வார்குழல் வேய்த்தோள் மடநல்லார் - மலர்மாலைக்குத் தகுந்த நீண்ட குழலையும் வேயனைய தோளையும் உடைய மங்கையர். 
 | 
| 
    (வி - ம்.) நல்லார் என்பார் என்க. மால்; சச்சந்தன். குணமாலைக்குற்ற பழி சீவகன் அவளைத் தீண்டியதனால் - துன்பமுற்றான் என்பது. 
 | 
( 3 ) | 
| 2330 | 
நாகந் நெற்றி நன்மணி சிந்தும் மருவிபோ |   | 
னாகந் நெற்றிந் நன்மணி யோடை நறவிம்மு |   | 
நாகந் நெற்றிந் நன்மலர் சிந்நி நளிர்செம்பொ |   | 
னாகந் நெற்றி மங்கைய ரொத்தார் மடநல்லார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நாகம் நெற்றி நன்மணி சிந்தும் அருவிபோல் - மலையின் உச்சியிலிருந்து அழகிய மணிகளைச் சிந்தி வீழும் அருவியைப்போல; நன்மணி ஓடை நாகம் நெற்றி - அழகிய மணிகளிழைத்த பட்டத்தையுடைய யானையின் நெற்றியிலே; நறவு விம்மும் நாகம் நெற்றி நன்மலர் சிந்தி - தேன் சொரியும் சுரபுன்னையின் உச்சியிலிருந்த அழகிய மலர்களைச் சிந்துவதால்; மடநல்லார் - மாடங்களின்மேல் நின்ற மங்கையர்; நளிர் செம்பொன் நாகம் நெற்றி மங்கையர் ஒத்தார் - விளங்கும் பொன்னிரைந்த சுவர்க்கத்திலிருந்து மலரைச் சொரிகின்ற மங்கையரைப் போன்றனர். 
 | 
| 
    (வி - ம்.) நாகம் நான்கும் நிரலே, மலை, யானை, சுரபுன்னை, வானுலகம் என்க. ஓடை - முகபடாம். நற - தேன். நன்மலர் சிந்தி என்புழி செய்தெனெச்சத்தைச் செய என்னெச்சமாக்குக. 
 | 
( 4 ) | 
| 2331 | 
கோடிக் கொடுங் கூம்புயர் நாவாய் நெடுமாடங் |   | 
கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாருங் |   | 
கோடித் தானைக் கொற்றவற் காண்பா னிழைமின்னக் |   | 
கோடிச் செம்பொற் கொம்பரின் முன்முன் றொழுவாரும். |   | 
 
 
 |