| நாமகள் இலம்பகம் | 
132  | 
  | 
| 
    (இ - ள்.) தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக் குவளையே அளவு உள்ள கொழுங்கணாள் அவளையே அமிர்தாக - தவளையின் குரல்போலும் ஒலியையுடைய கிண்கிணியையும் தாமரையனைய சிற்றடியையும் குவளையே அனைய மதர்த்த கண்களையும் உடைய அவளையே அமுதாகக் கொண்டு; உவளகம் தனது ஆக அவ் அண்ணலும் ஒடுங்கினான் - அந்தப்புரம் ஒன்றுமே தனக்குரியதாக ஒழிந்தவற்றில் வேட்கையின்றி அப் பெரியான் சுருங்கினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) ஏகாரம் இரண்டும் தேற்றம் . உம்மை : சிறப்பு; உவளகம் - ஒரு பக்கமும் ஆம். 
 | 
  | 
| 
    தவளையின் வாய்போன்ற வாயையுடைய கிண்கிணியுமாம். அவளையே என்புழி, சுட்டு உலகறிசுட்டு. அவ்வண்ணல் என்றது இகழ்ச்சி. 
 | 
( 214 ) | 
|  244 | 
விண்ணி னோடமிர் தம்விலைச் செல்வது |  
|   | 
பெண்ணி னின்பம் பெரிதெனத் தாழ்ந்தவ |  
|   | 
னெண்ண மின்றி யிறங்கியிவ் வையகந் |  
|   | 
தண்ணந் தாமரை யாளொடுந் தாழ்ந்ததே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) விண்ணினோடு அமுதம் விலைச் செல்வது பெண் - விண்ணும் அமுதும் விலைபெறுவ தொன்றாகும் பெண்மை; நின் இன்பம் பெரிது என - அதிலும் நினது அரசியலின்பம் பெரிதுகாண் என்று காரியங் கூறுதலின்; தாழ்ந்தவன் எண்ணம் இன்றி இறங்கி - நின்னினும் தாழ்ந்த நிமித்திகன் செல்வம் வேண்டுதலின்றித் துறவிலே வீழ்தலாலே; இவ் வையகம் தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்தது - இவ் வுலகம் குளிர்ந்த அழகிய தாமரையாளுடனே நின்னிடத்தே தங்கிற்று, (இனி நினக்கு வேறொரு மனக்கவற்சியின்று.) 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'நின்இன்பம்' என்பது அரசனை நோக்கி நிமித்திகன் கூறியது. [அதனை உட்கொண்டு தருமதத்தன் கூறினான்.] 'பெண்ணினின்பம் எனப் பெரிதாழ்ந்தவன்' என்பதும் பாடம். 
 | 
  | 
| 
    [இனி, பெண்ணினுடைய இன்பம் விண்ணும் அமுதும் விலைபெறக் கூடியதாகும். அத்துணைப் பெரிது என, அவ்வின்பத்திலே தங்கிய அரசனின் எண்ணம் ஆட்சியிலே இல்லாமையால் இவ் வையகம் இறங்கி நின்னிடத்தே தாமரையாளொடுந் தங்கியது என்று பொருள் கொள்வதும் பொருந்தும்.] 
 | 
  | 
| 
    இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் சிறிது வலிந்து கூறுவதாயினும் இன்பமுடைத்தாதலுணர்க, 
 | 
( 215 ) |