| பூமகள் இலம்பகம் |
1325 |
|
|
| 2342 |
பெய்யார் முகிலிற் பிறழ்பூங்கொடி மின்னின் மின்னா | |
நெய்யார்ந்த கூந்த னிழற்பொன்னரி மாலை சோரக் | |
கையார் வளையார் புலிகண்ணுறக் கண்டு சோரா | |
நையாத் துயரா நடுங்கும்பிணை மான்க ளொத்தார். | |
|
|
(இ - ள்.) பெய்ஆர் முகிலின் பிறழ் பூங்கொடி மின்னின் மின்னா - பெய்தல் நிறைந்த முகிலிலே பிறழும் அழகிய கொடி மின்போல மின்னி; நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரிமலை சோர - நெய்ப்புப் பொருந்திய கூந்தலிலிருந்து ஒளிவிடும் பொன்னரிமாலை சோரும்படி; கைஆர் வளையார் - கையிற் பொருந்திய வளையினாராகிய அம் மகளிர்; நையாத் துயராச் சோரா - நைந்து துயருற்றுச் சோர்ந்து; புலி கண்ணுறக் கண்டு நடுங்கும் - புலியைக் கண்ணிற்கண்டு நடுங்குகின்ற; பிணை மான்கள் ஒத்தார் - பெண்மான்களைப் போன்றனர்.
|
|
(வி - ம்.) பெய் - பெய்தல். பூங்கொடிமின் - அழகிய கொடி மின்னல். மின்னா - மின்னி. பொன்னரிமாலை - ஒரு கூந்தலணி. வளையார் : மகளிர். சோரா - சோர்ந்து. நையா - நைந்து, துயரா - துயர்உற்று. பிணைமான் - பெண்மான். சீவகனுக்குப் புலியும் மகளிர்க்கு மானும் உவமைகள்.
|
( 16 ) |
| 2343 |
வட்டம் மலர்த்தா ரவனாலருள் பெற்று வான்பொற் | |
பட்டம் மணிந்தா ளிவர்தங்களுள் யாவ னென்ன | |
மட்டா ரலங்க லவன்மக்களுந் தானு மாதோ | |
பட்டா ரமருட் பசும்பொன்முடி சூழ வென்றார். | |
|
|
(இ - ள்.) வட்டம் மலர்த்தாரவனால் அருள் பெற்று - வட்டமாகிய தாரை அணிந்த கட்டியங்காரனாலே அருளைப் பெற்று; வான் பொன் பட்டம் அணிந்தாள் - சிறந்த பட்டம் அணிந்தவள்; இவர் தங்களுள் யாவள் என்ன - இவர்களிலே எவள் என்று (சீவகன் தன் பணியாளரை) வினவ; (நீ கேட்டவளுக்குக் களத்தின் செய்தி கூறுகின்றவர்); மட்டுஆர் அலங்கலவன் மக்களும் தானும் - தேனார்ந்த மாலையவனின் மக்களும் தானுமாக; பசும்பொன் முடிசூழ அமருள் பட்டார் என்றார் - பசிய பொன்முடி சூழப் போரிலே பட்டனர் என்று கூறினர்.
|
|
(வி - ம்.) அடுத்த செய்யுளும் இஃதும் ஒருதொடர்.
|
|
வட்டத்தார். மலர்த்தார் என இயைக்க. தாரவன் : கட்டியங்காரன். பட்டம் அணிந்தாள் - பட்டத்தரசி, என்று சீவகன் வினவ என்க. களத்தின் செய்தி அவட்குக் கூறுகின்றுவர் பட்டார் என்றார் என்க.
|
( 17 ) |