| பூமகள் இலம்பகம் |
1327 |
|
|
| 2346 |
மண்கேழ் மணியி னுழையுந்துகி னூலின் வாய்த்த | |
நுண்கேழ் நுசுப்பின் மடவீர்நம்மை நோவ செய்யே | |
னொண்கேழ்க் கழுநீ ரொளிமுத்த முமிழ்வ தேபோற் | |
பண்கேழ் மொழியீர் நெடுங்கண்பனி வீழ்த்தல் வேண்டா. | |
|
|
(இ - ள்.) துகில் நுழையும் மண்கேழ் மணியின் - ஆடையினுள்ளே மறையும் தூய ஒளிபொருந்திய மணிபோன்ற; நூலின் வாய்த்த நுண்கேழ் நுசுப்பின் மடவீர்! - நூலினும் பொருந்திய நுண்ணிய நிறமுடைய இடையினைக்கொண்ட மங்கையரே! நும்மை நோவ செய்யேன் - யான் நும்மை வருந்துவன செய்யேன். ஒண்கேழ் கழுநீர் ஒளி முத்தம் உமிழ்வதேபோல் - (இனி) ஒள்ளிய நிறமுடைய கழுநீர்மலர் ஒளியையுடைய முத்துக்களைச் சொரிதல் போல; பண்கேழ் மொழியீர்! - இசைபோல விளங்கும் மொழியினீர்!; நெடுங்கண் பனி வீழ்த்தல் வேண்டா - நீண்ட கண்கள் பனித்துளியைச் சிந்துதல் வேண்டா.
|
|
(வி - ம்.) மண் - மண்ணுதல்; கழுவுதல், கேழ் - ஒளி. ஆடை போர்த்து நின்றமையால் துகிலின் நுழையும் மண்கேழ் மணியின் மடவீர் என்றான். துகிலின் நுழையும் மணியின் மடவீர் என்க. நோவ : பலவறிசொல். கழுநீர் - கண்ணுக்கும், முத்தம் - கண்ணீர்த்துளிக்கும் உவமை.
|
( 20 ) |
| 2347 |
என்னுங்கட் குள்ள மிலங்கீர்வளைக் கையி னீரே | |
மன்னிங்கு வாழ்வு தருதும்மவற் றானும் வாழ்மின் | |
பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மின்னென்றான் | |
வின்னுங்க வீங்கி விழுக்கந்தென நீண்ட தோளான். | |
|
|
(இ - ள்.) இலங்கு ஈர்வளைக் கையினீரே! - விளங்கும், அறுக்கப்பட்ட வளையணிந்த கையை உடையீர்; மன் இங்கு வாழ்வு தருதும் - நும் மன்னன் நுமக்குத் தந்த வாழ்வுக்குரிய பொருளை யாமும் இங்கு நல்குவோம்; அவற்றானும் வாழ்மின் - அவற்றைக்கொண்டு ஈண்டிருந்தும் உயிர் வாழ்மின்; பொன் இங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மின் உங்கட்கு உள்ளம் என்? என்றான் - பொன்னை இங்கிருந்து கொண்டு சென்று சென்று வெளியில் நுமக்கேற்ற இடங்களிலும் வாழுங்கோள்; உங்கள் கருத்து என்ன? என்றான்; வில்நுங்க வீங்கி விழுக் கந்து என நீண்ட தோளான் - வில்லை வலிக்கப் பருத்துச் சிறந்த தூண் என்னுமாறு நீண்ட தோளையுடையான்.
|
|
(வி - ம்.) வாழ்வு - வாழ்தற்குரிய பொருள். மன் என்றது கட்டியங்காரனை. இங்கு மன் வாழ்வு தருதும் என மாறுக. மன்தந்த பொருள் என்பது கருத்து. இங்குப் பொன்கொண்டு என மாறுக.
|
( 21 ) |