| நாமகள் இலம்பகம் |
133 |
|
| 245 |
தன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப் |
| |
பின்னை வெளவிற் பிறழ்ந்திடும் பூமக |
| |
ளன்ன வன்வழிச் செல்லினிம் மண்மிசைப் |
| |
பின்னைத் தன்குலம் போர்க்குந ரில்லையே |
|
|
(இ - ள்.) தன்னை ஆக்கிய தார்ப்பொலி வேந்தனைப் பின்னை வெளவின் - தன்னை மேம்படுத்திய, தாரினாற் பொலிவுற்ற அரசனைப் பின்னர் அழித்தால்; பூமகள் பிறழ்ந்திடும் - தன்குலமும் திருவும் மண்மிசையினின்றும் பிறழும்; அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசை பின்னைத் தன்குலம் பேர்க்குநர் இல்லை - ஆக்கிய அரசன் வழியே சென்றால் இவ் வுலகினின்றும் தன் குலத்தையும் திருவையும் பெயர்ப்பார் இல்லை.
|
|
|
(வி - ம்.) பூமகள் - திரு. இஃது உலகியலாற் கூறினான். 'தார் கெழு வேந்தன்' என்பதும் பாடம். முன்னிலைப் புறமொழி எனினுமாம்.
|
( 216 ) |
| 246 |
திலக நீண்முடித் தேவரும் வேந்தரு |
| |
முலக மாந்தர்க ளொப்பவென் றோதுப |
| |
குலவு தார்மன்னர்க் கியானிது கூறுவன் |
| |
பலவு மிக்கனர் தேவரிற் பார்த்திபர். |
|
|
(இ - ள்.) திலகம் நீள்முடித் தேவரும் வேந்தரும் ஒப்ப என்று உலக மாந்தர்கள் ஓதுப - முடிகளுக்கு மேலான முடியையுடைய வானவரும் அரசரும் ஒப்பார் என்று உலகிலுள்ள மக்கள் கூறுவர்; (அவர் அறியார்) தேவரின் பார்த்திபர் பலவும் மிக்கனர் - தேவரினும் அரசர் பலவகைக் குணங்களாலும் மேம்பட்டவர்; குலவுதார் மன்னர்க்கு இது யான் கூறுவன் - விளங்கும் மாலையணிந்த அரசர்கட்கு உள்ளதொரு சிறப்பை யான் கூறுவேன் (அதனைக் கேள்.)
|
|
|
(வி - ம்.) 'கூறலென்' என்று பாடமாயின் ஒப்புக் கூறேன் என்றான் என்க. இதுமுதல், 'மன்னவன் பகையாயதொர் மாதெய்வம்' (சீவக. 241) என்றதனைக் குறித்துக் கூறுகின்றான்.
|
( 217 ) |
| 247 |
அருளு மேலர சாக்குமன் காயுமேல் |
| |
வெருளச் சுட்டிடும் வேந்தனு மாதெய்வ |
| |
மருளி மற்றவை வாழ்த்தினும் வையினு |
| |
மருளி ஆக்க லழித்தலங் காபவோ. |
|
|
(இ - ள்.) வேந்து எனும் மா தெய்வம் - அரசன் என்னும் பெரிய தெய்வம்; அருளுமேல் அரசு ஆக்கும் - அருளினால் அரசிலே ஆக்கமுறச் செய்யும்; காயுமேல் மன்வெருளச் சுட்
|
|