| பூமகள் இலம்பகம் |
1332 |
|
|
| 2355 |
குழவாய்ச் சங்கின் குரலொலியுங் | |
கொலைவல் யானைச் செவிப்புடையு | |
மெழுவார் யாழு மேத்தொலியு | |
மிறைவன் கேளாத் துயிலேற்றான். | |
|
|
(இ - ள்.) கொழுவாய் விழுப்புண் குரைப் பொலியும் - அழகிய இடும்பை தரும் புண்வாய் காற்றைப் புறப்பட விடும் ஒலியையும்; கூந்தல் மகளிர் குழை சிதறி அழுவார் அழுகைக் குரல் ஒலியும் - இறந்தவர்க்குக் கூந்தலையுடைய மகளிர் குழையை வீசிவிட்டு அழுவாருடைய அழுகைக் குரலிற் பிறந்த ஒலியையும்; அதிர்கண் முரசின் முழக்கு ஒலியும் - அதிரும் கண்ணையுடைய முரசு முழக்குதலால் உண்டாம் ஒலியையும்; குழுவாய்ச் சங்கின் குரல் ஒலியும் திரண்ட வாயையுடைய சங்கின் முழக்கால் எழுந்த ஒலியையும்; கொலை வல்யானைச் செவிப் புடையும் - நொந்த யானையின் காதடிப்பினால், எழும் ஒலியையும்; எழுவார் யாழும் - யாழிசைப்பாரின் யாழொலியையும்; ஏதது ஒலியும் - வாழ்த்தும் ஒலியையும்; இறைவன் கேளாத் துயில் ஏற்றான் - அரசன் கேட்டவாறு துயில் நீங்கினான்.
|
|
(வி - ம்.) விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்டபுண் - இடும்பை தரும்புண் என்பர் நச்சினார்க்கினியர். விழுமம் - இடும்பை. குரைப்பொளி: இருபெயரொட்டு. அழுவார் : வினையாலணையும் பெயர். குழுவாய்ச் சங்கென்புழி, குழு - திரட்சி, செவிப்புடை - காதடித்தலால் எழும் ஒலி. எழுவார் . எழுப்புவோர். இறைவன் : சீவகன்.
|
( 29 ) |
| 2356 |
தொடித்தோண் மகளி ரொருசாரார் | |
துயரக் கடலு ளவர்நீந்த | |
வடிக்கண் மகளி ரொருசாரார் | |
வரம்பி லின்பக் கடனீந்தப் | |
பொடித்தான் கதிரோன் றிரைநெற்றிப் | |
புகழ்முப் பழநீர்ப் பளிங்களைஇக் | |
கடிப்பூ மாலை யவரேந்தக் | |
கமழ்தா மரைக்கண் கழீஇயினான். | |
|
|
(இ - ள்.) ஒரு சாரார் தொடித் தோள் மகளிர் அவர் துயரக் கடலுள் நீந்த - பட்டவருடைய மகளிராகிய தொடியணிந்த தோளையுடைய அவர்கள் துயரக் கடலிலே நீந்தவும்; ஒரு சாரார் வடிக்கண் மகளிர் வரம்பில் இன்பக் கடல் நீந்த - வென்று மீண்டவருடைய மகளிராகிய மாவடுவனைய கண்களை யுடையவர் எல்லையில்லாத இன்பக் கடலிலே நீந்தவும்; திரை நெற்றிக் கதிரோன் பொடித்தான் - கடலின் முகட்டிலே கதிரவன்
|