| பூமகள் இலம்பகம் | 
1333  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) இருபது பட்டிற்குக் கோடி என்பதைப் பெயராக்கியும் உரைப்பர். 
 | 
| 
    கோடிக்கோடும்+கோள்திக்கு ஓடும் எனக் கண்ணழிக்க. கூம்பு - பாய்மரம், நாவா - ஓடம், கோடித்தானை என்புழிக் கோடி - எண்ணுப் பெயர்; கொம்பரிற் கோடி என மாறுக. கோடி - வளைந்து. 
 | 
( 5 ) | 
| 
 தோன்றினான்; புகழ் முப்பழநீர்ப் பளிங்கு அளைஇ - புகழ் பெற்ற முப்பழங்கள் ஊறின நீரிலே கருப்பூரத்தைக் கலந்து; கடிப்பூ மாலையவர் ஏந்தக் கமழ் தாமரைக்கண் கழீஇயினான் - மணமலாமாலை மகளிர் ஏந்தத் தாமரை மலரனைய தன் கண்களைச் சீவகன் கழுவிக் கொண்டான். 
 | 
| 
    (வி - ம்.) ஒரு சாராராகிய மகளிர் துயரக் கடலுள் நீத்த ஒரு சாராராகிய மகளிர் இன்பக் கடல் நீக்க என இயைக்க. தோற்றோரும் வென்றோருமாகிய இருசாராருள் ஒருசாரார் என்க. பொடித்தான் - தோன்றினான். முப்பழம் - கடு, நெல்லி, தான்றி என்பன. பளிங்கு - கருப்பூரம். 
 | 
( 30 ) | 
| 2357 | 
முனைவற் றொழுது முடிதுளக்கி |   | 
  முகந்து செம்பொன் கொளவீசி |   | 
நினைய லாகா நெடுவாழ்க்கை |   | 
  வென்றிக் கோல விளக்காகப் |   | 
புனையப் பட்ட வஞ்சனத்தைப் |   | 
  புகழ வெழுதிப் புனைபூணான் |   | 
கனைவண் டார்க்கு மலங்கலுங் |   | 
  கலனு மேற்பத் தாங்கினான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நினையல் ஆகா நெடு வாழ்க்கை - பிறராற் கருதற்கரிய பெருஞ் செல்வத்திற்கும்; வென்றிக் கோலம் - வெற்றிக் கோலத்திற்கும்; விளக்காக - விளக்க மாகும்படி; முனைவன் தொழுது - அருகனை அஞ்சலி செய்து; முடிதுளக்கி - தலைதாழ்த்து; செம்பொன் முகந்து கொள வீசி - சிறந்த பொன்னை யாவரும் வாரிக் கொள்ளுமாறு கொடுத்து; புனையப்பட்ட அஞ்சனத்தைப் புகழ எழுதி - கை செய்த மையைப் புகழுமாறு கண்ணில் எழுதி; கனை வண்டு ஆர்க்கும் அலங்கலும் கலனும் - வண்டுகள் முரலும் மாலையும் அணிகளும்; புனை பூணான் ஏற்பத் தாங்கினான் - புனைந்த பூணான் பொருந்தத் தாங்கினான். 
 | 
| 
    (வி - ம்.) முனைவன் என்றது அருகக்கடவுளை. பிறராற் பெறலாமென்று நினையலாகா என்றவாறு. கண்டோர் புகழ எழுதி என்க. கனை வண்டு - மிக்கவண்டு. அலங்கல் - மாலை. 
 | 
( 31 ) | 
| 2358 | 
முறிந்த கோல முகிழ்முலையார் |   | 
  பரவ மொய்யார் மணிச்செப்பி |   | 
லுறைந்த வெண்பட் டுடுத்தொளிசோ் |   | 
  பஞ்ச வாசங் கவுட்கொண்டு |   | 
 
 
 |