பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1334 

2358 செறிந்த கமுநீர்ப் பூப்பிடித்துச்
  சேக்கை மரீஇய சிங்கம்போ
லறிந்தார் தமக்கு மநங்கனா
  யண்ணல் செம்மாந் திருந்தானே.

   (இ - ள்.) முறிந்த கோலம் முகிழ் முலையார் பரவ - தளிர்த்த கோலத்தை யுடைய முகிழ்த்த முலையார் வணங்க; மொய்ஆர் மணிச் செப்பில் - மணிகள் இழைத்த செப்பில்; உறைந்த வெண்பட்டு உடுத்து - இருந்த வெண்பட்டை அணிந்து; ஒளிசேர் பஞ்ச வாசம் கவுள் கொண்டு - ஒளி பொருந்திய ஐந்து முகவாசத்தையும் கவுளிலடக்கி; செறிந்த கழுநீர்ப் பூப்பிடித்து - இதழ் நெருங்கிய கழுநீர் மலரைக் கையில் ஏந்தி; அறிந்தார் தமக்கும் அநங்கனாய் - (இக் கோலத்தாலே) அறிந்தவர்களுக்கும் காமனாகத் தோற்றி; சேக்கை மெரீஇய சிங்கம்போல் - (ஆண்மையினாலே) சேக்கையைப் பொருந்திய சிங்கம் போல; அண்ணல் செம்மாந்து இருந்தான் - சீவகன் வீறுடன் அச் சேக்கையிலே இருந்தான்.

   (வி - ம்.) 'முலையார் மெலிய' என்றும் பாடம். இது மற்றை நாளிலே சமய மண்டபமிருந்த காட்சி.

( 32 )
2359 வார்மீ தாடி வடஞ்சூடிப்
  பொற்பார்ந் திருந்த வனமுலையா
ரோ்மீ தாடிச் சாந்தெழுதி
  யிலங்கு முந்நீர் வலம்புரிபோற்
கார்மீ தாடிக் கலம்பொழியுங்
  கடகத் தடக்கைக் கழலோனைப்
போர்மீ தாடிப் புறங்கண்ட
  புலால்வேன் மன்னர் புடைசூழ்ந்தார்.

   (இ - ள்.) வார் மீது ஆடி - கச்சை அறுத்து; வடம்சூடி - முத்துமாலை அணிந்து; பொற்பு ஆர்ந்திருந்த வனமுலையார் - பொலிவு நிறைந்திருந்த ஒப்பனையுடைய முலையார்; ஏர்மீது ஆடிச் சாந்தெழுதி - அழகு மேலாகச் சாந்தையும் எழுதி; இலங்கும் முந்நீர் வலம்புரிபோல் - விளங்கும் பாற்கடலிலிருந்தெழுந்த சங்கநிதிபோல; கார்மீது ஆடிக் கலம்பொழியும் - காரை வென்று கலன்களைப் பொழிகிற; கடகத் தடக்கைக் கழலோனை - கடகமணிந்த தடக்கையையும் கழலையும் உடையவனை; போர்மீது ஆடிப் புறம் கண்ட புலால் வேல் மன்னர் புடை சூழ்ந்தார் - போரை வென்று பகைவரைப் புறங்கண்ட புலவு நாறும் வேலணிந்த மன்னர் சூழ்ந்தனர்.