| பூமகள் இலம்பகம் |
1337 |
|
|
| 2363 |
ரகுலி போல்வதோ ராரமு | |
மார்பிடைத் துயல | |
வெரியும் வார்குழை யிமையவ | |
னொருவன்வந் திழிந்தான். | |
|
|
(இ - ள்.) திருவில் துளங்கி மால்வரைக் குலவியது அனையது ஓர் தேன் தார் - வானவில் அசைந்து பெரிய மலை ஒன்றிலே விளங்கிய தன்மை போல்வதொரு தேன்சொரியும் தாரும்; அருவி போல்வது ஓர் ஆரமும்-(அம் மலைமிசை) அருவி போல்வதாகிய ஒரு முத்துவடமும்; மார்பிடைத் துயல - மார்பிலே அசைய; விளங்கு ஒளி விரியும் மாலையன் - விளங்கும் ஒளி பரவும் இயல்பினனாய்; முடியினன் - முடியினனாய்; எரியும் வார்குழை இமையவன் ஒருவன் வந்து இழிந்தான் - ஒளிவிடும் நீண்ட குழையணிந்த வானவன் ஒருவன் வந்து இறங்கினான்.
|
|
(வி - ம்.) வந்தவன் சுதஞ்சணன், திருவில் - வானவில் இமையவன் - தேவன்; என்றது சுதஞ்சணனை, இழிந்தான் - இறங்கினன்.
|
( 37 ) |
| 2364 |
கொம்மை யார்ந்தன கொடிபட | |
வெழுதின குவிந்த | |
வம்மை யார்ந்தன வழகிய | |
மணிவட முடைய | |
வெம்மை செய்வன விழுத்தகு | |
முலைத்திட முடைய | |
பொம்மெ லோதியர் பொழிமின்னுக் | |
கொடியென விழிந்தார். | |
|
|
(இ - ள்.) கொம்மை ஆர்ந்தன் - பெருமை நிறைந்தன கொடிபட, எழுதின - கொடியமைய எழுதப்பட்டன; குவிந்த - குவிந்தன; அம்மை ஆர்ந்தன - அழகிய கருமை நிறைந்தன அழகிய மணிவடம் உடைய - அழகிய முத்துவடம் உடையன ; வெம்மை செய்வன - விருப்பூட்டுவனவாகிய; முலைத்தடம் உடைய - முலைகளையுடைய; பொம்மெல் ஓதியர் - பொங்கிமெத்தென்ற கூந்தலையுடையர்; பொழிமின்னுக்கொடி என இழிந்தார் - ஒளியைப் பெய்யும் மின்னொழுங்கென இறங்கினர்.
|
|
(வி - ம்.) கொம்மை - பெருமை; வட்டமுமாம். கொடி - தொய்யிற் கொடி. அம்மை - அழகிய மை. வெம்மை - விருப்பம், இவர்கள் - சுதஞ்சணன் மனைவிமார் என்க.
|
( 38 ) |