| நாமகள் இலம்பகம் | 
134  | 
  | 
| 
 டிடும் - சீறுமேல் மிகுதியும் அஞ்சுமாறு தீய்த்துவிடும்; மற்று மருளிஅவை - இனி, மயக்கத்தையுடைய அத் தெய்வங்கள்; வாழ்த்தின் அருளி ஆக்கலும் - தம்மை ஒருவன் வாழ்த்தின் அருள்செய்து ஆக்குதலும்; வையின் அழித்தலும் அங்கு ஆபவோ? - பழித்தால் அவனை அருளாமல் அழித்தலும் அவை கட்கு அப்பொழுதே ஆகாவே. 
 | 
  | 
| 
    (வி - ம்.) மன் - மிகுதி. மருளி : இ : பகுதிப்பொருள் விகுதி. மற்று : வினைமாற்று. 'தாமினி நோயும்' (புறப். வெண். 187) என்றாற் போல [வாழ்த்தினும் வையினும் என்பவற்றிலுள்ள] உம்மை மாற்றுக. ஆக்கல், அழித்தல் : காலந் தோற்றாத வினைப்பெயர் [தொழிற்பெயர்]. ஆப: எதிர்காலத்திற்குரிய பகரத்தோடு அன்பெறாது வந்த அகரவீற்றுப் பலவறி சொல். [ஆபவோ] : ஓகாரம் : எதிர்மறை. 
 | 
( 218 ) | 
|  248 | 
உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி |  
|   | 
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமா |  
|   | 
லிறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந் |  
|   | 
தறங்கள் வெளவ வதன்புறங் காக்கலார். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மன்னவன் உறங்கும் ஆயினும் தண்ஒளி கறங்கு தெண்திரை வையகம் காக்கும் - அரசன் உறங்குவானாயினும் அவன் ஒளி ஒலிமிகும் தெளிந்த அலைகடல் சூழ்ந்த உலகைக் காத்திருக்கும்; இறங்குகண் இமையார் விழித்தே யிருந்தும் அறங்கள் வெளவ அதன் புறம் காக்கலார் - தெய்வத்தன்மை குலையுந் தேவர்கள் விழித்தவாறே யிருந்தும் உலகினர் செய்யும் அறங்களை அசுரர் கைப்பற்ற, அவ்வுலகின் சார்பிற் காக்கமுடியாதவரானார். 
 | 
  | 
| 
    (வி - ம்.) இறங்குகண் இமையார் - தெய்வத்தன்மை குலையுந்தேவர், என்றது, மேலே, 'எல்லை மூவைந்து நாள்கள் உளவென இமைக்குங்கண்ணும்' (சீவக. 2810) என்பராதலின். கண்ணிமையார், தேவர்க்கு ஒரு பெயர். 
 | 
( 219 ) | 
|  249 | 
யாவ ராயினு நால்வரைப் பின்னிடிற் |  
|   | 
றேவ ரென்பது தேறுமிவ் வையகங் |  
|   | 
காவன் மன்னவர் காய்வன சிந்தியார் |  
|   | 
நாவி னும்முரை யார்நவை யஞ்சுவார். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின் - இழிந்தோராயினும் அவர் பின்னே நால்வரைத் திரியவிட்டால்; தேவர் என்பது இவ்வையகம் தேறும் - அவரை ஊழ் வகுக்கும் தெய்வம் என்னுந் தன்மையை இவ்வுலகம் தெளியும்; (ஆதலால்) நவை அஞ்சுவார் - அரசரால் வரும் தீங்கை அஞ்சுவோர், காவல் 
 | 
  |