பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1340 

வேறு

2369 மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கை
  வெண்கவரி விரிந்து வீசப்
பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமா
  முழைக்கலங்கள் பொலிந்து தோன்ற
மன்னர் முடியிறைஞ்சி மாமணியங்
  கழலேந்தி யடியீ டேத்தச்
சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார்
  போற்றிசைப்பத் திருமால் போந்தான்.

   (இ - ள்.) மின்னும் கடல் திரையின் மாமணிக்கை வெண்கவரி விரிந்து வீச - ஒளிரும் பாற்கடலலைபோல மணிகளிழைத்த கைப்பிடியையுடைய வெண்கவரி பரவி வீச; பொன் அம்குடை நிழற்ற - அழகிய பொற்குடை நிழல் செய்ய; பொன்மயம் ஆம் உழைக்கலங்கள் பொலிந்து தோன்ற - பொன்னாலாகிய உழைக்கலங்கள் விளக்கித் தோன்ற; மன்னர் முடி இறைஞ்சி மாமணி அம் கழல் ஏந்தி அடியீடு ஏத்த - அரசர்கள் முடியைத் தாழ்த்தி மணிக்கழலையேந்தி அடியிடுதலை ஏத்த; சின்ன மலர்கோதைத் தீஞ்சொலார் போற்றிசைப்ப - விடு பூவையும் கோதையையும் அணிந்த இனிய மொழியார் போற்றிக் கூற; திருமால் போந்தான் - சீவகன் (நன்னிலம் மிதிக்கப்) போந்தன்.

   (வி - ம்.) பொன்னங்குடை : 'பொன்' அழகுமாம் இது உலாக் குடையாதலிற் பொற்குடை என்றலே தகவுடைத்து. காத்தல் தொழிலாலும் வடிவாலும் திருமால் என்றே கூறினார். அடுத்து இரண்டு உலா அரசர்க்காகாமையின் மணத்திற்குப் பின் உலாக் கூறுவார் ஈண்டு கன்னிலம்மிதித்தற்கு மண்டபத்தே புகுந்தமைதோன்ற, 'அடியீடேத்த' என்றார்.

( 43 )
2370 மந்தார மாமாலை மேற்றொடர்ந்து
  தழுவவராத் தாம மல்கி
யந்தோவென் றஞ்சிறைவண் டேக்கறவின்
  புகைபோய்க் கழுமி யாய்பொற்
செந்தா மரைமகளே யல்லதுபெண்
  சாராத திருவின் மிக்க
சிந்தா மணியேய்ந்த சித்திரமா
  மண்டபத்துச் செல்வன் புக்கான்.

   (இ - ள்.) மந்தார மாமாலை மேல் தொடர்ந்து - மந்தார மலர்மாலை மேலே தொடுக்கப் பெற்று; தழுவ வராத் தாமம்