பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1341 

மல்கி - தழுவவியலாத மாலைகள் நிறைந்து; அந்தோ என்று அம் சிறை வண்டு ஏக்கற - அந்தோ! என்று அழகிய சிறகிசனையுடைய வண்டு (தேனையுண்ணப் பெறாமல்) ஏக்கம் அடையும் படி; இன் புகைபோய்க் கழுமி - இனிய புகை சென்று பொருந்தி; ஆய்பொன் செந்தாமரை மகளே அல்லது - ஆய்ந்த பொன்னாலாகிய செந்தாமரையிலுள்ள திருமகள் அல்லாமல்; பெண் சாராத - வேறு பெண் சாராத; திருவின் மிக்க - செல்வத்தாற் சிறந்த; சிந்தாமணி ஏய்ந்த - சிந்தாமணியின் தன்மை பொருந்திய; சித்திரமா மண்டபத்துச் செல்வன் புக்கான் - ஓவியம் எழுதிய மண்டபத்திலே சீவகன் புகுந்தான்;

   (வி - ம்.) தழுவ வாராத் தாமங்களில் தேனையுண்ண முடியாமல் வண்டுகள் ஏக்கற்றன. 'திருவல்லது பெண்சாராத' எனவே சமய மண்டபமாம். மேல் நினைத்தன நல்குவான் சீவகனென்பதைக் கொண்டு, 'சிந்தாமணி ஏய்ந்த' என்றார்.

( 44 )
 

   (இ - ள்.) சிங்கம்போல் தேர் மன்னர் முடிகள் சூழ - சிங்கம் போன்ற தேர் வேந்தரின் முடிகள் சூழ; வார்குழைகள் திருவில் வீச - நீண்ட குழைகள் அழகிய ஒளியை வீச; மங்குல் மணிநிற வண்ணன் போல் - முகிலைப் போலும் நீலமணியைப் போலும் நிறமுடைய திருமால் போலும்; செங்கண் கமழ் பைந்தார்ச் செஞ்சுடர் போல் - செங்கண்களையும் மணமுறும் பைந்தாரையும் உடைய செஞ்ஞாயிறு போலும்; பைங்கண் உளை எருத்தின் பன்மணி வாள் எயிற்றுப் பவள நாவின் - பைங்கண்களையும் உளையையுடைய கழுத்தையும் பலமணிகளாலான கூரிய பற்களையும் பவள நாவையும் உடைய; சிங்காசனத்தின்மேல் தேர்மன்னன் இருந்தான் - சிங்கம் சுமந்த அணையின் மேல் தேரையுடைய சீவக மன்னன் அமர்ந்தான்.

   (வி - ம்.) மங்குல் - திசை என்பர் நச்சினார்க்கினியர்.

   உளை - பிடரிமயிர். சிங்கம் மன்னர்கட்குவமை; மணிநிறவண்ணன்; திருமால். செஞ்சுடர் - ஞாயிறு. எனவே தந்தையைப்போலிருந்தான் என்றார் நச்சினார்க்கினியர்.

( 45 )