| பூமகள் இலம்பகம் |
1343 |
|
|
|
பூட்டும் ஓமகுண்டத்திலே வளர்ந்து ஒலிக்கும் செந்தீயையுடைய மறைவல்லாருக்களித்த இடம் பரவிய நிலத்துடன்; எல்லாம் - மற்றுமுள்ள இறையிலி நிலங்களையும்; இழந்தவர்க்கு இரட்டியாக - முன் அவனால் இழந்தவர்களுக்கு இருபங்காக; அவை உடன் விடுமின் என்றான் - அவற்றை உடனே விடுமின் என்று மந்திரிகளை நோக்கிக் கூறினான்.
|
|
(வி - ம்.) இவை இறையிலி நிலங்கள், 'தட' என்பது தூபமுட்டி எனினும் ஈண்டு வேள்விக் குண்டத்தை உண்த்திதுகின்றது.
|
|
இறையிலி நிலங்களை முன்போல விடுமின் எனவும், இழந்தவர்க்கு இரட்டியாக விடுமின் எனவும் இருமுறை கூட்டிக் கூறுக.
|
( 47 ) |
| 2374 |
என்றலுந் தொழுது சென்னி | |
நிலனுறீஇ யெழுந்து போகி | |
வென்றதிர் முரசம் யானை | |
வீங்கெருத் தேற்றிப் பைம்பொற் | |
குன்றுகண் டனைய கோலக் | |
கொடிநெடு மாட மூதூர்ச் | |
சென்றிசை முழங்கச் செல்வன் | |
றிருமுர சறைவிக் கின்றான். | |
|
|
(இ - ள்.) என்றாலும் - என்று சீவகன் கூறியவுடன் செல்வன் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி - நந்தட்டன் சீவகனைத் தொழுது முடி நிலமுற வணங்கி எழுந்து சென்று; வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றி - வென்று முழங்கும் முரசை யானையின் பருத்த பிடரிலே. அமைத்து; பைம்பொன் குன்று கண்டனைய கோலம் - புதிய பொன்னாலாகிய மலையைக் கண்டாற் போன்ற அழகினையுடைய; கொடி நெடுமாடம் - கொடியுடைய நீண்ட மாடங்களையுடைய; மூதூர் சென்று - மூதூரிலே போய்; இசை முழங்கத் திருமுரசு அறைவிக்கின்றான் - புகழ் முழங்க அழகிய முரசை (வள்ளுவனைக் கொண்டு) அறைவிக்கின்றவன்.
|
|
(வி - ம்.) நிலன் உறீஇ - நிலத்தைப் பொருந்தும்படி வணங்கி என்க. வீங்கெருத்து - பருத்த பிடரி. பொன்குன்றம் மாடத்திற்குவமை. அறைவிக்கின்றான் : வினையாலணையும் பெயர். இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர்.
|
( 48 ) |
| 2375 |
ஒன்றுடைப் பதிளை யாண்டைக் | |
குறுகட னிறைவன் விட்டா | |
னின்றுளீ ருலகத் தென்று | |
முடனுளீ ராகி வாழ்மின் | |
|