| பூமகள் இலம்பகம் |
1344 |
|
|
| 2375 |
பொன்றுக பசியு நோயும் | |
பொருந்தலில் பகையு மென்ன | |
மன்றல மறுகு தோறு | |
மணிமுர சார்ந்த தன்றே. | |
|
|
(இ - ள்.) பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் பொன்றுக! - பசியும் பிணியும் பொருத்தமில்லாத பகையும் ஒழிக!; இன்று உளீர் உலகத்து என்றும் உடன் உளீராகி வாழ்மின்! - இப்போதுள்ள நீவிர் எப்போதும் உலகத்தில் உடனிருப்பீராகி வாழ்மின்!; ஒன்றுடைப் பதினையாண்டைக்கு உறு கடன் இறைவன் விட்டான் - பதினாறாண்டுகட்கு உரிய கடனை இறைவன் நீக்கிவிட்டான்; என்ன - என்று; அன்றே மன்றல் மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்தது - அப்போதே மணமுடைய தெருக்கள்தோறும் அழகிய முரசு ஒலித்தது.
|
|
(வி - ம்.) ஒன்றுடைப் பதினையாண்டு என்றது பதினாறாண்டு என்றவாறு. கடன் - அரசிறைப் பொருள். பசியும் நோயும் பொன்றுக என மாறுக. என்ன - என்று வள்ளுவன் கூறி முழக்க முரசு ஆர்த்தது என்க.
|
( 49 ) |
| 2376 |
நோக்கொழிந் தொடுங்கி னீர்க்கு | |
நோய்கொளச் சாம்பி னீர்க்கும் | |
பூக்குழன் மகளிர்க் கொண்டான் | |
புறக்கணித் திடப்பட் டீர்க்கும் | |
கோத்தரு நிதியம் வாழக் | |
கொற்றவ னகரோ டென்ன | |
வீக்குவார் முரசங் கொட்டி | |
விழுநக ரறைவித் தானே. | |
|
|
(இ - ள்.) நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் - பார்வை யிழந்து மெலிந்திருக்கும்; நோய்கொளச் சாம்பினீர்க்கும் - நோய் கொண்டதால் மனமிடிந்தீர்க்கும்; பூக்குழல் மகளிர்க் கொண்டான் புறக்கணித்திடப் பட்டீர்க்கும் - பூவையணிந்த குழலையுடைய பரத்தையரிடத்து வேட்கையாலே கணவனாற் புறக்கணித்திடப் பட்டீர்க்கும் ; வாழ நகரோடு கோத்தரு நிதியம் கொற்றவன் (தரும்) என்ன - வாழ்வதற்கு மனையுடன் இடையறாத செல்வத்தையும் அரசன் நல்குவான் என்று; விழுநகர் வீக்குவார் முரசம் கொட்டி அறைவித்தான் - சிறந்த நகரிலே, கட்டப்பட்ட வாரையுடைய முரசினைக் கொட்டி அறைவித்தான்.
|
|
(வி - ம்.) கோ - பசுவுமாம். கொற்றவன் தரும் என ஒருசொல் வருவிக்க. அல்லது கோத்தரும் என்பதிலுள்ள தரும் என்பதைச்
|