பக்கம் எண் :

  1347 

12. இலக்கணையார் இலம்பகம்

(கதைச் சுருக்கம்)

   சீவகன் ஏவலாலே அவன் தம்பியர் சென்று காந்தருவ தத்தை முதலிய தேவிமாரை அழைத்து வந்தனர். அம்மகளிரைச் சீவகன் அன்புகூர்ந்து வரவேற்றுத் தலையளி செய்தனன். அவரும் அளவிலா உவகை கொண்டனர். கோவிந்த மன்னன் தன் மகளாகிய இலக்கணைக்குத் திருமணம் நிகழ்த்த நனனாள் குறித்தான். நகரம் அணி செய்யப்பட்டது. மக்கள் இனியன உண்டும் உடுத்தும் இன்புற்றனர்.

   சீவகன் வெள்ளி மணையில் வீற்றிருப்ப, மகளிர் அறுகம்புல்லை நறுநெய்யில் தோய்த்து நெய் யேற்றினர். யானைமிசை ஏற்றிக் கொணர்ந்த மங்கல நீரால் ஆட்டினர்; இலக்கணைக்கும் அங்ஙனமே மங்கல நீராட்டினர். இருவரையும் அணிகலன் முதலியவற்றாற் கோலம் செய்தனர். மாமுது பார்ப்பான் மறை வழிகாட்ட இருவரும் தீவலஞ் செய்தனர். அவ்வழி இன்னியங்கள் கடலென ஆர்த்தன.

   நல்ல முழுத்தத்திலே இருவரும் மணக்கட்டிலில் ஏறினர். மணப்பள்ளியில் இருவரும் ஊடியும் கூடியும் இன்பமுற்றனர். பின்னர் இருவரும் நகரமாந்தரெல்லாம் கண்டு மகிழும்படி நகர் வலஞ் செய்தனர். அருகண் திருக்கோயிலை அடைந்து மலர்ப்பலி முதலியன கொடுத்து ஆரா அன்புடன் வழிபாடியற்றினர். பின்னர்ச் சீவகன் அரியணையிலிருந்து செங்கோல் செலுத்தி மன்னுயிரைப் பாதுகாப்பானாயினன்.

   அவ்வாறு அருளாட்சி புரிகின்ற காலத்தே தன்னை அன்புடன் வளர்த்த தந்தையாகிய கந்துக்கடனுக்குப் புதுவதாக அரசுரிமையையும் தாயாகிய சுநந்தைக்குப் பெருந்தேவிப் பட்டத்தையும் வாங்கினன். நந்தட்டனுக்கு ‘இளவுடையான்‘ என்னும் இளவரசுப் பட்ட மீந்தான் நபுலவிபுலர்க்குக் குறுநில மன்னர் மகளை மணஞ் செய்வித்தான். அவர்க்கு நாடுகள் பலவு மீந்தான். தன் பொருட்டு இன்னலுற்ற மாந்தர்க்கு நிதியும் நாடும் நல்கினான். கைத்தாயர்க்கு வளமிக்க ஐந்தூர்களை வழங்கினன். கட்டியங்காரனுடைய பொருளை எல்லாம் மாமனாகிய கோவிந்த மன்னனுக்கு நல்கினான். சுதஞ்சணனுக்குக் கோயில் எடுப்பித்து அவன் வரலாற்றை நாடகமாக எழுதி நடிப்பித்தான். இளம்பருவத்தே தான் விளையாடுதற்கு இன்னிழலளித்த