இலக்கணையார் இலம்பகம் |
1349 |
|
|
துன்புறுதற்கு ஒரு சாபம் பெற்று, அச் சாபம் வீடுகண்டவரைப் போல மகிழ்ந்து இழிந்தாரென்க; வீடுகண்டவர் பின் வருத்தம் நீங்கினாற் போல இருவரும் வருத்தம் நீங்கினார் என்றுமாம்.
|
( 2 ) |
2380 |
அன்று சூடிய மாலைய ராடிய சாந்தர் | |
|
பொன்றி வாடிய மேனியர் பொன்னிறை சுருங்கார் | |
|
சென்று காதலன் றிருவிரி மரைமல ரடிமே | |
|
லொன்றி வீழ்ந்தனர் குவளைக்க ணுவகைமுத் துகவே. | |
|
(இ - ள்.) அன்று சூடிய மாலையர் - (இவன் பிரிந்த) அன்று அணிந்த மாலையர்; ஆடிய சாந்தர் - பூசிய சாந்தினர்; பொன்றி வாடிய மேனியர் - கெட்டு வாடிய மேனியர்; பொன் நிறை சுருங்கார் - பொன் போன்ற கற்புக் கெடாதவர் ஆக; சென்று - போய்; காதலன் திருவிரி மரைமலர் அடிமேல் - தம் காதலனுடைய அழகுமிகும் தாமரை மலர் போன்ற டிகளிலே; குவளைக்கண் உவகை முத்து உக - குவளைமலர் போன்ற கண்களிலிருந்து உவகைக் கண்ணீர் முத்தென உகுமாறு; ஒன்றி வீழ்ந்தனர் - ஒன்றுபட்டு வீழ்ந்தனர்.
|
(வி - ம்.) அன்று என்றது இவன் பிரிந்த நாளிலே என்பதுபட நின்றது. பொன்றி - கெட்டு. பொன்போன்ற நிறை என்க. நிறை - கற்பு காதலரிருவரும் தம் நெஞ்சை ஒருவர் மற்றொருவர்பால் நிறுத்தலின் நிறை எனப்படும். அதுவே கற்பு. திரு - அழகு. மரைமலர் - தாமரை மலர். உவகைமுத்து - இன்பக் கண்ணீர்த்துளி.
|
( 3 ) |
2381 |
இலங்கு பூண்வரை மார்புற வெடுத்தவன் முயங்க | |
|
மலங்கி வாட்கண்கள் வருபனி சுமந்துடன் வெருவிக் | |
|
கலங்கு நீரிடைக் கலக்குறு கருங்கய லிணைபோற் | |
|
புலம்பி யோடின செவியுற நெடியன பொலிந்தே | |
|
(இ - ள்.) அவன் இலங்குபூண் வரை மார்புஉற எடுத்து முயங்க - (அவர்களைச்) சீவகன் விளங்கும் பூணணிந்த மலையனைய மார்பிலே பொருந்துமாறு எடுத்துத் தழுவுதலினால்; வாட்கண்கள் மலங்கி வருபனி சுமந்து உடன் வெருவி - (முதலில்) வாள் போன்ற கண்கள் கலங்கி, வரும் நீரைச் சுமந்து, அச்சுற்று; கலங்கும் நீரிடைக் கலக்குஉறு கருங்கயல் இணைபோல் - கலங்கிய சின்னீரிடைக் கலங்கல் உற்ற கரிய இணைக் கயல்கள் போல; புலம்பி ஓடின - வருந்திக் கெட்டனவாகி; பொலிந்து செவியுற நெடியன - (பிறகு) பொலிவுற்றுச் செவிவரை நீண்டனவாயின.
|
(வி - ம்.) முதலில் அவன் பிரிவைக் குறித்து வருந்தின; பிறகு தெளிந்துன. ஓடுதல் - கெடுதல்; ‘ஓடிய துணர்தலும்‘ (சிறுபாண். 214) என்றாற் போல.
|
( 4 ) |