இலக்கணையார் இலம்பகம் |
1352 |
|
|
நூல்களை முற்றக் கற்று; சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான் - முகபடாம் அணிந்த யானையையும் விளங்கும் பொற்சிவிகையையும் பெற்றவனாகிய; விழுப் பெருங்கணி. மிகச் சிறந்தவனாகிய கணி; ஊழின் அன்றியும் உறுவினை ஓரையின் முடிப்பான் - ஊழ்வினையால் தானே முடிதலே அன்றி இந் நல்வினையை நல்லோரையானும் முடித்தற்கு; வேழ் வேந்தற்கு விரித்து உரைத்தான் - களிற்றையுடைய மன்னற்கு நன்னானை விளக்கிக் கூறினான்.
|
(வி - ம்.) ஆழி - கரை. மால் - பெரிய. துறைபோதல் - முற்றக் கற்றல். யானை சிவிகை முதலியவற்றை விருதாகப் பெற்ற கணி என்றவாறு.
|
“........................புரையோர் புகழ |
|
நிழற்பெருங் குடையும் நேராசனமும் |
|
செருப்பொடு புகுதலும் சேனை யெழுச்சியும்“ |
|
பெற்ற கணி என்பர் பெருங்கதையாசிரியர்; (2. 2 : 17 - 19). வேந்தன் : சீவகன்.
|
( 9 ) |
2387 |
ஓங்கு கொற்றவற் கோதிய வுயர்பெரு நாளால் | |
|
வீங்கு வெள்ளியங் குன்றென விளங்கொளி யுடைய | |
|
தேங்கொண் மாலையுந் திலகமு மணிந்ததிண் குணத்த | |
|
பாங்கிற் பண்ணின நூற்றெட்டுப் படுமதக் களிறே. | |
|
(இ - ள்.) ஓங்கு கொற்றவற்கு ஓதிய உயர்பெரு நாளால் - உயர்ந்த மன்னனுக்குக் கூறிய உயர்ந்த பெருநாளிலே; வீங்கு வெள்ளி அம் குன்றென - விளக்கு ஒளி உடைய பருத்த வெள்ளி மலைபோல விளங்கும் ஒளியுடையனவாய், தேன்கொள் மாலையும் திலகமும் அணிந்த திண்குணத்த - தேன் பொருந்திய மாலையும் பொட்டும் அணிந்த திண்ணிய பண்புடையனவாய் (உள்ள); நூற்றெட்டு மதம்படு களிறு - நூற்றெட்டு மதகளிறுகள்; பாங்கின் பண்ணின - பாங்குறப் பண்ணப்பட்டன.
|
(வி - ம்.) வெள்ளணி யணிந்தனவாதலின் வெள்ளிக்குன்று போன்றன; வெள்ளிக் குன்றெனப் பண்ணப்பட்டன.
|
( 10 ) |
2388 |
விளங்கு வெண்டுகி லுடுத்துவெண் சாந்துமெய் பூசித் | |
|
துளங்கு மஞ்சிகை துளைச்சிறு காதினுட் டுளங்க | |
|
வளங்கொண் மாலைகள் சூடிமுத் தணிந்துவண் முரசங் | |
|
களங்கொள் வேழத்தி னேற்றினர் கடிமுர சறைவான். | |
|
(இ - ள்.) விளங்கு வெண்துகில் உடுத்து - விளங்கும் வெண்மையான ஆடையை உடுத்து; வெண்சாந்து மெய்பூசி
|