இலக்கணையார் இலம்பகம் |
1353 |
|
|
வெள்ளைச் சந்தனத்தை மெய்யில் அணிந்து; துளங்கும் மஞ்சிகை துளைச்சிறு காதினுள் துளங்க - அசையும் மஞ்சிகை எனும் காதணி சிறு துளையையுடைய காதினுள் அசைய; வளம்கொள் மாலைகள் சூடி - வளமிகும் மாலைகளைச்சூடி; முத்து அணிந்து - முத்து மாலை புனைந்து; கடிமுரசு அறைவான் - மணமுரசறைவதற்கு; களம்கொள் வேழத்தின் வண்முரசம் ஏற்றினர் - போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின்மீது வண்முரசை ஏற்றினர்.
|
(வி - ம்.) மங்கலச் செயல்களை அறிவிக்கும் வள்ளுவன் வெண் மலர் வெள்ளாடை முதலியன அணிதல் மரபு. மஞ்சிகை - ஓரணிகலன். அறைவான் - அறைதற்கு.
|
( 11 ) |
2389 |
கேண்மின் கேண்மின்கள் யாவரு மினியன் கேண்மின் | |
|
பூண்மி னித்தில மணிவடம் பூசுமின் சாந்தம் | |
|
வாண்மி னுண்ணிடை வருந்தினுஞ் சூட்டணிந் தழகா | |
|
ராண மாகிய வருவிலை வண்ணப்பட் டுடுமின். | |
|
(இ - ள்.) யாவரும் இனியன கேண்மின்! கேண்மின்! கேண்மின்கள்! - எல்லோரும் யான் கூறும் இனிய மொழிகளைக் கேண்மின்கள்! கேண்மின்கள்!! கேண்மின்கள்!!!; நித்திலம் மணிவடம் பூண்மின் - முத்து மாலையையும் மணிவடத்தையும் அணிமின்!; சாந்தம் பூசுமின்! - சந்தனம் பூசுமின்!; வாள்மின் நுண் இடை வருந்தினும் - ஒளிரும் மின்னனைய மெல்லிடை வருந்தினாலும்; சூட்டு அணிந்து - நெற்றிச் சூட்டை அணிந்து - அழகு ஆர் ஆணம் ஆகிய அருவிலை வண்ணப் பட்டு உடுமின் - அழகு பொருந்திய விருப்பமாகிய அரிய விலைபொருந்திய நிறமுடைய பட்டை அணிமின்!
|
(வி - ம்.) கேண்மின்; விரைசொல்லடுக்காதலின் மூன்றாயிற்று.
|
வடம் பூண்மின், சாந்தம் பூசுமின் என மாறி இயைக்க. நித்தில மணி : பண்புத்தொகை. ஆணம் - நேயம். உடுமின் - உடுத்துங்கோள்.
|
( 12 ) |
2390 |
பிள்ளை வெண்பிறைச் சிறுநுதற் பெரும்பிட்ட மணிமி | |
|
னுள்ள மேனியு மொளிர்மணிக் கலங்களிற் புனைமின் | |
|
வள்ளல் வாய்மொழி யான்படு பாலமிர் தல்லா | |
|
லுள்ள மேவினும் பிறவுணப் பெறீரெழு நாளும். | |
|
(இ - ள்.) வெண் பிள்ளைப் பிறைச் சிறுநுதல் பெரும் பட்டம் அணிமின்! - வெண்மையான, பிள்ளையாகிய பிறை போன்ற சிறுநுதலிலே பெரிய பட்டத்தைப் புனைமின்!; உள்ள மேனியும் ஒளிர்மணிக் கலங்களின் புனைமின்! - மெய்யெங்கும் விளங்கும் மணிக்கலன்களாலே அணிமின்!; வள்ளல் வாய்மொழி -
|