இலக்கணையார் இலம்பகம் |
1354 |
|
|
அரசன் அருளிச் செயலாகையால்; ஆன்படு பால் அமிர்து அல்லால் பிற - பசுவின் பால் கலந்த சோற்றையல்லாமற் பிறவற்றை; எழுநாளும் உள்ளம் மேவினும் உணப்பெறீர் - ஏழு நாட்களும் உம் மனம் விரும்பினும் உண்ணாதிருப்பீராக!
|
(வி - ம்.) 'பிள்ளைப் பிறை' என்றது, 'பிள்ளை குழவி' (தொல். மரபு. 24) என்னுஞ் சூத்திரத்து உம்மையை எச்சப்படுத்தி அதனாற் கொள்க.
|
பிள்ளைப் பிறை என்றது இளம்பிறையை. இது நெற்றிக்குவமை. முன்பு அணியணிந்த இடமொழிய உள்ள மேனி என்க. வள்ளல் வாய் மொழி - அரசன் கட்டளை. பாலமிர்து - பாற் சோறு; பாயசம்.
|
( 13 ) |
2391 |
வாழை மல்கிய மணிக்குலைக் கமுகொடு நடுமின் | |
|
றாழ நாற்றுமின் றாமங் ளகிற்குடம் பரப்பி | |
|
யாழின் பாடலு மாடலு மாங்குதோ றியற்றிப் | |
|
போழு மால்விசும் பெனப்பல பொலங்கொடி யெடுமின். | |
|
(இ - ள்.) மல்கிய மணிக்குலைக் கமுகொடு வாழை நடுமின் - நிறைந்த மணிபோன்ற குலைகளையுடைய கமுகினுடன் வாழையை நடுமின்; தாமங்கள் தாழ நாற்றுமின் - மாலைகளைத் தாழத் தொங்கவிடுமின்!; அகில் குடம் பரப்பி - அகிற் புகையிட்ட குடங்களைப் பரப்பி; அரங்குதோறும் பாழின் பாடலும் ஆடலும் இயற்றி - அரங்குகளிலெல்லாம் யாழின் பாட்டையும் ஆடலையும் இயற்றி, மால் விசும்பு போழும் எனப் பல பொலங்கொடி எடுமின்! - பெரிய வானைப் பிளப்பபனபோலப் பல பொற்கொடிகளை எடுமின்!
|
(வி - ம்.) மல்கிய - நிறைந்த மணிக்குலை - நீலமணிபோன்ற குலை. நாற்றுதல் - தூங்கவிடுதல், தாமங்கள் நாற்றுமின் என மாறுக. மால் விசும்பு போழும் எனக் கண்டோர் கூறும்படி என்க.
|
( 14 ) |
2392 |
மாலை வாண்முடி மன்னவன் மணவினை யெழுநாட் | |
|
சீல மில்லன சினக்களி றகற்றுகென் றணிந்த | |
|
கோல மார்முர சிடியுமிழ் தழங்கென முழங்க | |
|
நீல மாக்கட னெடுநகர் வாழ்கென வறைந்தார் | |
|
(இ - ள்.) மாலைவாள் முடி மன்னவன் மணவினை எழுநாள் - மாலை அணிந்த ஒளிரும் முடியையுடைய அரசனுடைய மணவினை நிகழும் எழுநாளினும்; சீலம் இல்லன சினக்களிறு அகற்றுக என்று - ஒழுக்கமில்லனவாகிய கொலைக்களிறுகளை நீக்குக என்று கூறி; நீலமாக்கடல் நெடுநகர் வாழ்க என - நீலப் பெருங்கடல் சூழ்ந்த பெருநகர் வாழ்க என்று வாழ்த்தி; அணிந்த கோலம் ஆர்முரசு இடிஉமிழ் தழங்கு என முழங்க - அணிசெய்யப்
|