பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1355 

பெற்ற ஒப்பனை நிறைந்த முரசை இடி உமிழ்ந்த ஓசைபோல முழங்கும்படி; அறைந்தார் - அறைந்தனர்.

   (வி - ம்.) நச்சினார்க்கினியர், 'நெடுநகர் வாழ்கென' என்பதைக் 'கேண்மின்' என்பதன் முன் அமைப்பர்.

   சீலம் - ஒழுக்கம். இல்லனவாகிய சினக்களிறு என்க. அவை திருமணவிழாவிற் குழுமும் மாந்தர்க்குத் தீங்கு செய்யும் என்பதுபற்றி அகற்றுக என்றவாறு.

”விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி
எழாநிலை புகாஅ இனங்கடி சீற்றத்து
ஆணை யிகக்கும் அடக்கருங் களிறு
சேணிகந் துறைந்த சேனையிற் கடிகென”.

   என்றார் கதையினும். ( 1 - 38; 90 - 3.) தழங்கு - முழக்கம்.

( 15 )

வேறு

2393 முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய்
விரைவொ டெங்கணும் வெள்வளை விம்மின
புரையில் பொன்மணி யாழ்குழ றண்ணுமை
வரவ வானி னதிர்ந்த வணிமுழா.

   (இ - ள்.) முரசம் ஆர்ந்த பின் - முரசறைந்த பிறகு ; மூவிரு நாள்கள் போய் - ஆறு நாட்கள் கழிய; எங்கணும் விரை வொடு வெள்வளை விம்மின - எங்கும் பரபரப்புடன் வெண்சங்குகள் முழங்கின; புரைஇல் பொன்மணி யாழ்குழல் தண்ணுமை அணிமுழா - குற்றம் இல்லாத யாழும் குழலும் தண்ணுமையும் அழகிய முழாவும்; அரவ வானின் அதிர்ந்த - ஒலியுறும் முகில் முழக்கென முழங்கின.

   (வி - ம்.) போய் - போக. போகா நிற்க இவையும் நிகழ்ந்தன என மேல் வருவனவற்றையும் உடனிகழ்ச்சியாக்குக. 'ஆர்த்த' என்பது 'ஆர்ந்த' என விகாரப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர்.

( 16 )
2394 விண்வி ளக்குவ போல்விரி பூந்துகள்
கண்வி ளக்கிக் கலந்தவெண் சாந்தினான்
மண்வி ளக்கி மலர்ப்பலி சிந்தினார்
பண்வி ளக்கிய பைங்கிளி யின்சொலார்.

   (இ - ள்.) பண் விளங்கிய பைங்கிளி இன்சொலார் - பண்ணைத் தோற்றுவித்த இனிய கிளிமொழியார்; விண் விளக்குவ போல் - வானுலகத் துராலைத் துடைக்குமாறு போல; விரிபூந்துகள் கலந்த கண் விளக்கி - மிகுந்த பூந்துகளை அதனுடன்