இலக்கணையார் இலம்பகம் |
1357 |
|
|
2397 |
பால்வெண் டிங்கண் மணிக்கை படுத்தவை | |
|
போலு மாடியி னோக்கிப் பொலங்கலக் | |
|
கோலஞ் செய்பவர் கோல வெறிப்பினான் | |
|
மாலை வண்டின மாலைக்கண் கொண்டவே. | |
|
(இ - ள்.) பல்வெண் திங்கள் மணிக்கை படுத்தவை போலும் ஆடியில் - பால் போன்ற வெண்மையான திங்கள் மணிக்காம்பு சேர்ந்தனவற்றை ஒக்கும் கண்ணாடியில்; நோக்கி - பார்த்துக் கொண்டு; பொலம்கலக் கோலம் செய்பவர் - பொற் கலத்தையுடைய ஒப்பனையைச் செய்பவர்; கோல வெறிப்பினால் - கோலத்தால் வரும் கண் வெறிப்பாலே; மாலை வண்டினம் மாலைக் கண் கொண்ட - ஒழுங்கினையுடைய வண்டினம் கண்தோன்றா வாயின.
|
(வி - ம்.) மணிக்கை - மணியாலியன்ற கைப்பிடி. ஆடி - கண்ணாடி. பொலங்கலம் - பொன் அணிகலன், வெறிப்பு - கண்வெறியோடல். மாலை வண்டினம் - ஒழுங்குடைய வண்டுத்திரள். மாலைக்கண் - ஒரு வகைக் கண்ணோய்.
|
( 20 ) |
2398 |
போக மாமழை போழ்ந்து புதத்தொறு | |
|
மாக மேந்துவ பொன்மணித் தோரண | |
|
மாக நாற்றின தாம மணிக்குட | |
|
மேக மாநகர் வீதி நிரைத்தவே. | |
|
(இ - ள்.) ஏக மாநகர் வீதி - தனக்கு நிகரில்லாத நகரின் தெருக்களிலே; புதத்தொறும் போக மாமழை போழ்ந்து - வாயில் தோறும் நுகர்ப்பொருளை நல்கும் மழையைப் பிளந்து; மாகம் ஏந்துவபோல் - வாளை ஏந்துவன போன்று; மணித்தோரணம் - மணித் தோரணங்களிலே; தாமம் ஆக நாற்றின - தாமங்கள் பொருந்தத் தூக்கப் பெற்றன; மணிக்குடம் நிரைத்த - மணிக்குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டன.
|
(வி - ம்.) போக மாமழை - நுகர் பொருளைத் தரும் பெரிய முகில். புதவு - புத என நின்றது; வாயில் மாகம் - வானம். ஏகமாநகர் - ஒப்பற்ற நகர்.
|
( 21 ) |
2399 |
ஆடன் மங்கையர் கிண்கிணி யார்ப்பொலி | |
|
பாட லின்னொலி பண்ணமை யாழொலி | |
|
மோடு கொண்முழ விண்முழக் கீண்டிய | |
|
மாட மாநகர் மாக்கட லொத்ததே. | |
|
(இ - ள்.) ஆடல் மங்கையர் கிண்கிணி ஆர்ப்பு ஒலி - ஆடுகின்ற மாதர்களின் கிண்கிணி யார்க்கும் ஒலியும்; பாடல் இன
|