பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1360 

   (இ - ள்.) வழுஇல் மாந்தரும் மாவும் மல்கிய தொழுதி தன்னை யான் முழுதும் சுமக்கலேன் எனா - குற்றமற்ற மாந்தரும் விலங்கும் நிறைந்த தொகுதியை யான் முழுதும் சுமக்க ஆற்றலிலேன் என்று; மண்மகள் முற்றும் வாய்திறந்து - நிலமகள் வாய் முற்றும் திறந்து; நெய்யும் பாலுமாக; அழுதிட்டாள் - அழுது விட்டாள்.

   (வி - ம்.) இஃது அரவம் கூறியது.

   நிலம் சுமக்கலாற்றாதபடி மாந்தர் குழுமினர், பொருள்கள் நிரம்பின, பேரொளி மிக்கது என்பது கருத்து. தொழுதிதொகுதி.

( 28 )

2406 கொடியெழுந் தலமருங் கோயில் வாயில்கண்
மடலெழுந் தலமருங் கமுகும் வாழையு
மடியிருந் துகிலுடை மாக்க ணாடியும்
புடைதிரள் பூரண குடமும் பூத்தவே.

   (இ - ள்.) கொடி எழுந்து அலமரும் கோயில் வாயில்கள் - துகிற் கொடிகளெழுந்தசையும் கோயிலின் வாயில்களெல்லாம் ; மடல் எழுந்து அலமரும் கமுகும் வாழையும் - மடல் தோன்றி அசையும் கமுக மரமும் வாழைமரமும்; மடி இருந் துகில் உடை மாக்கணாடியும்-பெரிய மடித்துகிலையுடைய பெரிய கண்ணாடியும்; புடைதிரள் பூரண குடமும் பூத்த - புடை திரண்ட நிறைகுடமும் மலர்ந்தன.

   (இ - ள்.) தூமம் - நறுமணப் புகைப் பொருள்களையும்; ஆர்ந்தன துப்புரவுகள் - நிறைந்தனவாகிய நுகர் பொருள்களையும்; ஏமம் ஆயின - பிற நலம்பயக்கும் பொருள்களையும்; ஏந்தி நிற்றலால் - (ஆடவரும் மகளிரும்) ஏந்தி நிற்பதால்; நாம நன்னகர் - புகழ் பெற்ற இந்த நல்ல நகரை; நன்பொன் கற்பகம் காம வல்லியும் களங்கொண்டிட்டது - அழகிய பொற் கற்பகமும் காமவல்லியும் இடங்கொண்டிட்டன போன்றன.

   (வி - ம்.) இட்டது : ஒருமை பன்மை மயக்கம்.

   தூமம் - புகை. துப்புரவ்வுகள் என்புழி வகரமெய் வண்ணத்தால் விரிந்தது. ஏமம் - இன்பம். கற்பகம். ஆடவர்க்கும் காமவல்லி மகளிர்க்கும் உவமை.

( 27 )
2405 வழுவின் மாந்தரு மாவு மல்கிய
தொழுதி தன்னையான் சுமக்க லேனேனா
முழுது மண்மகண் முற்றும் வாய்திறந்
தழுதிட் டாணெயும் பாலு மாகவே.