பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1361 

   (வி - ம்.) கோயில் - அரண்மனை. மடல் - புல்லினத்தின் ஓர் உறுப்பு. இருந்துகில் - கரிய உறைத்துகில் எனினுமாம். மாக்கண்ணாடி - பெரிய கண்ணாடி. புடை - பக்கம். பூரணகுடம் - நிறைகுடம். பூத்த - பொலிவுபெற்றன.

( 29 )
2407 கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்கிணி
யுடைமணி பொற்சிலம் பொலிக்குங் கோயிலுட்
குடைநிழன் மன்னர்தங் கோதைத் தாதுவேய்க்
தடிநிலம் பெறாததோர் செல்வ மார்ந்ததே.

   (இ - ள்.) கடிமலர் மங்கையர் காய்பொன் கிண்கிணி - மணமலர் அணிந்த மாதர்களின் பொற் கிண்கிணியும்; உடை மணி பொன் சிலம்பு ஒலிக்கும் கோயிலுள் - அவர்களுடைய மணிமேகலையும் பொற்சிலம்பும் ஒலிக்கும் அரண்மனையிலே; குடைநிழல் மன்னர்தம் கோதைத் தாது வேய்ந்து - குடைநிழலையுடைய வேந்தரின் மலர்மாலையின் தாது வேய்தலின்; அடி நிலம் பெறாதது ஓர் செல்வம் ஆர்ந்தது - அடிகள் தாதின்மேலன்றி நிலத்தின்மேற் பதியாத செல்வம் மிக்கது.

   (வி - ம்.) கடி - மணம். காய்பொன் : வினைத்தொகை. மணியுடைப் பொற்சிலம்பு என்க. கோதை - மாலை. தாது-பூந்துகள்.

( 30 )
2408 துளங்குபொற் குழைகளுந் தோடுஞ் சுண்ணமுங்
கிளர்ந்தகில் சாந்துபூக் கமழ்ந்து கேழ்கிள
ரிளங்கதி ரெறிமணிப் பூணு மாரமும்
விளங்கிமே லுலகினை வெறுப்பித் திட்டதே.

   (இ - ள்.) துளங்கு பொன் குழைகளும் தோடும் சுண்ணமும் கிளர்ந்து - ஒளியசையும் பொற் குழைகளும் தோடுகளும் பொற் சுண்ணமும் கிளரப் பெற்று; அகில் சாந்து பூக்கமழ்ந்து - அகிலும் சாந்தும் மலரும் மணங்கமழ்ந்து; கேழ்கிளர் இளங்கதிர்; எறிமணிப்பூணும் ஆரமும் விளங்கி - நிறம் கிளர்ந்து இளவெயில் வீசும் மணிக் கலனகளும் முத்தாரங்களும் விளங்கி; மேல் உலகினை வெறுப்பித்திட்டது - வானுலகினை இகழப் பண்ணியது.

   (வி - ம்.) துளங்கும் - அசையும். கிளர்ந்து - கிளரப்பட்டு. கமழ்ந்து . கமழப்பட்டு. விளங்கி விளங்கப்பட்டு.

( 31 )
2409 விரிந்துவான் பூத்தென விதானித் தாய்கதி
ரருங்கலப் பொடியினா லாபொற் பூமகண்
மருங்குல்போற் குயிற்றிய நகரின் மங்கலப்
பெருந்தவி சடுத்தனர் பிணையன் மாலையார்.

   (வி - ம்.) வான் விரிந்து பூத்தது என விதானித்து - வானம் பரவி மீனை மலர்வித்தது என்னுமாறு மேற்காட்டியைக்