பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1363 

   (இ - ள்.) மங்கலப் பெருங்கணி வகுத்த ஓரையால் - மங்கலப் பொழுது கூறும் பெரிய கணி வகுத்த ஓரையிலே; மங்கலம் வாழ்த்த - மங்கல வாழ்த்துக் கூறாநிற்க; மன்னவன் ஏறலும் - வேந்தன் இருக்கையில் அமர்ந்தவுடனே; மங்கல அச்சுதம் தெளித்து - மங்கலமாகிய அறுகையும் அரிசியையும் இட்டு; வாய்மொழி மங்கலக் கருவிமுன் உறுத்தி வாழ்த்தினார் - மந்திரித்த மங்கலமாகிய பொன்கருவி மஞ்சிகன் சேர்த்தினானாக, வாழ்த்தினார்.

   (வி - ம்.) உறுத்தி - உறுத்த.

   மங்கலப் பெருங்கணி - மங்கலப் பொழுதினை ஆராய்ந்து கூறும் அரசவைக் கணியன். ஓரை - முழுத்தம். மன்னவன் மங்கலம் வாழ்த்த என மாறுக. அச்சுதம் - அரிசி. கருவி - மயிர்க்கத்தி. நாவிதன் கருவி முன்னுறுத்த வாழ்த்தினார் என்க.

( 34 )
2412 முழங்கின வின்னிய மொய்த்த தேத்தொலி
கொழுங்கயற் கண்ணினார் கொண்டு பொன்னக
லிழிந்தனர் திருமயி ரேற்ப நீரதி
னிழன்றன சாமரை நிரைசங் கார்த்தவே.

   (இ - ள்.) இன் இயம் முழங்கின - இனிய இயங்கள் முழங்கின ; ஏத்து ஒலி மொய்த்தது - புகழொலி மிக்கது ; சாமரை நீரத்தில் நிழன்றன - சாமரைகள் நீர்மையுடன் நிழன்றன ; நிரை சங்கு ஆர்த்த - நிரையாகச் சங்குகள் முழங்கின; கொழுங்கயல் கண்ணினார் திருமயிர் பொன் அகல் ஏற்பக் கொண்டு இழிந்தனர் - செழுவிய கயலனைய கண்ணினார் திருமயிரைப் பொன்னகலிலே பொருந்தக் கொண்டு மண்டபத்தினின்றும் இழிந்தனர்.

   (வி - ம்.) திருமயிர் : சீவகன் தலையிலிருந்து மஞ்சிகனாற் கழிக்கப் பட்டது.

   இன்னியம் - இனிய இசைக்கருவிகள், ஏத்து ஒலி : வினைத்தொகை கண்ணினார், திருமயிரைப் பொன்னகலிலே ஏற்பக்கொண்டு இழிந்தார் என்க.

( 35 )
2413 பாற்கடன் முளைத்ததோர் பவளப் பூங்கொடி
போற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய் கோதையை
நாட்கடி மயிர்வினை நன்பொற் றாமரைப்
பூக்கடி கோயிலாள் புலம்ப வாக்கினார்.

   (இ - ள்.) பாற்கடல் முளைத்தது ஓர் பவளப் பூங்கொடி போல் - பாற்கடலிலே தோன்றியதாகிய ஒரு பவளக் கொடி போலே; சுடர்ந்து இலங்கு ஒளிப் பொன்செய் கோதையை - சுடர்விட்டு விளங்குகின்ற ஒளியினையுடைய, அழகுற்ற மாலை