பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1365 

2415 கான்முகம் புதைத்த தெண்ணீர்
  கவர்ந்துபொற் குடங்க ளார்த்தி
யூன்முகம் புதைத்த வேற்கண்
  ணவர்களிற் றுச்சி யேற்றி
வான்முகம் புதைத்த பன்மீன்
  மதியென மருண்டு நோக்கத்
தேன்முகம் புதைத்த மாலைக்
  குடைநிழற் றிருவிற் றந்தார்.

   (இ - ள்.) ஊன்முகம் புதைத்த வேல் கண்ணவர் - நிணத்தை அழுத்திய வேல்போலும் கண்ணினார்; கான்முகம் புதைத்த தெண்ணீர் கவர்ந்து பொன்குடங்கள் ஆர்த்தி - பூமுகம் மறைத்த தௌ்ளிய நீரை முகந்து பொற்குடங்களிலே நிறைத்து: வான்முகம் புதைத்த பன்மீன் மதியென மருண்டு நோக்க - (அவற்றை) வானிடத்தை மறைத்த பல மீன்களும் திங்களும் என மயங்கி நோக்கும்படி ; களிற்று உச்சி ஏற்றி - களிறுகளின் தலையிலே ஏற்றி; தேன்முகம் புதைத்த மாலைக் குடைநிழல் திருவில் தந்தார் - தேனினம் முகத்தை மறைத்த மாலையையுடைய குடையின் நிழலிலே செல்வத்துடன் தந்தனர்.

   (வி - ம்.) குடங்கட்குப் பன்னிறமுடைமையானும், சிறுமை பெருமையானும் மீனும் திங்களும் உவமையாயின.

( 38 )
2416 இழைத்தபொன் னகரின் வெள்ளி
  யிடுமணை மன்ன ரேத்தக்
குழைப்பொலிந் திலங்கு காதிற்
  கொற்றவ னிருந்த பின்றை
மழைக்கலின் றெழுந்த வார்கொண்
  மணிநிற வறுகை நெய்தோய்த்
தெழிற்குழை திருவில் வீச
  மகளிர்நெய் யேற்று கின்றார்.

   (இ - ள்.) பொன் இழைத்த நகரின் - பொன்னால் இழைத்த மண்டபத்திலே; வெள்ளியிடு மணை - வெள்ளியாற் செய்த மணையிலே; மன்னர் ஏத்த - அரசர்கள் புகழ; குழைப்பொலிந்து இலங்கு காதின் கொற்றவன் இருந்த பின்ற - குழை பொலிவுற்று விளங்கும் காதினையுடைய அரசன் அமர்ந்த பின்னர் ; மழைக் கவின்று எழுந்த வார்கொள் மணிநிற அறுகை - மழைக்குக் கிளைத்து அழகுற்று எழுந்த நீண்ட நீலமணிபோலும் நிறமுடைய அறுகினை; நெய்தோய்த்து - நெய்யிலே தோய்த்து; எழில