இலக்கணையார் இலம்பகம் |
1366 |
|
|
குழை திருவில் வீச மகளிர் நெய் ஏற்றுகின்றார் - அழகிய குழை வானவில்லென ஒளிவீச மகளிர் நெய்யேற்றத் தொடங்கினர்.
|
(வி - ம்.) பொன்னகர் என்றது மணவறையை. இடுமணை : வினைத்தொகை. கொற்றவன் : சீவகன். பின்றை - பின்பு. மழைக்குக் கவின் றெழுந்த என்க. மணி - நீலமணி. அறுகை - அறுகம்புல். நெய் யேற்றுதல் - ஒரு சடங்கு.
|
( 39 ) |
2417 |
மின்னுமிழ் வைரக் கோட்டு | |
|
விளங்கொளி யிமய மென்னும் | |
|
பொன்னெடுங் குன்றம் போலப் | |
|
பூமிமே னிலவி வைய | |
|
நின்னடி நிழலின் வைக | |
|
நேமியஞ் செல்வ னாகி | |
|
மன்னுவாய் திருவோ டென்று | |
|
வாழ்த்திநெய் யேற்றி னாரே. | |
|
(இ - ள்.) மின்உமிழ் வைரக் கோட்டு - ஒளியை உமிழும் வைர உச்சியையுடைய; விளங்கு ஒளி இமயம் என்னும் பொன் நெடுங்குன்றம் போல - விளங்கும் ஒளியை உடைய இமயம் என்கிற நீண்ட பொன்மலை போல; பூமிமேல் நிலவி - நிலமிசை நிலைபெற்று; நின் அடி நிழலின் வையம் வைக - உன் அடி நிழலிலே உலகம் தங்க; நேமி அம் செல்வன் ஆகி - சக்கரவாளத்திற்குத் தலைவனாகி; திருவோடு மன்னுமாய் என்று - இலக்கணையுடன் நிலைபெற்று வாழ்க என்று; வாழ்த்தி நெய் ஏற்றினார் - வாழ்த்தி நெய்யை ஏற்றினார்.
|
(வி - ம்.) வயிரம் என்னும் மணி பிறத்தற்கிடமான கோடு என்க. வையம் - உலகம். நேமியஞ் செல்வன் - சக்கரவாளத்திற்குத் தலைவன். திரு - ஈண்டிலக்கணை.
|
( 40 ) |
2418 |
நீடு நீர்மணி நீரு மல்லவு | |
|
மாடு நீரன வத்து மண்களு | |
|
மூடு மின்னனா ருரிஞ்சி யாட்டினார் | |
|
கூடி யின்னியங் குழுமி யார்த்தவே. | |
|
(இ - ள்.) ஊடு மின்னனார் - இடை மின்போன்ற மகளிர்; ஆடு நீரன அத்தும் மண்களும் அல்லவும் உரிஞ்சி - பூசும் நீரனவாகிய துவராலும் மண்ணாலும் அல்லனவற்றாலும் தேய்த்து; நீடுநீர் மணி நீரும் ஆட்டினார் - கங்கை முதலிய தூய நீராலும் சந்திரகாந்தக் கல்லின் நீராலும் ஆட்டினார் ; கூடும் இன் இயம் குழுமி ஆர்த்த - (அப்போது) தம்மில் அளவொத்த இனிய இயங்கள் கூடி ஒலித்தன.
|