|
1367 |
|
|
(வி - ம்.) 'அல்ல' என்றது துவரையும் மண்ணையும் ஒழிந்த ஐந்து விரையும் முப்பத்திருவகை ஓமாலிகையுமாம். 'பத்து மண்' என்றும் பாடம்.
|
மண்ணாவன:
|
”ஆனையே றேனக்கோ டாற்றங் கரைபுற்று |
|
வானவர்தங் கோயிலெழில் வான்கழனி - பானிலவு |
|
முத்தெரியும் வெண்டிரைநீர் மூதூர் வடதருவேர் |
|
பத்துமிதன் மண்ணாகப் பார்.” |
|
ஒழிந்தவற்றிற்குக் 'கங்கையின் களிற்றின் உச்சி' (சீவக. 623) என்ற கவியிற் கூறப்பட்டன.
|
( 41 ) |
2419 |
திருவ மன்னவன் சென்னித் தோ்மன்னர் | |
|
பொருவெண் பொற்குட முமிழும் பொங்குநீர் | |
|
பருதி தன்னொளி மறையப் பான்மதி | |
|
சொரியுந் தீங்கதிர்த் தோற்ற மொத்தவே. | |
|
(இ - ள்.) திருவ மன்னவன் சென்னி - திருவையுடைய மன்னவனின் முடியிலே; தேர்மன்னர் பொருவெண் பொற்குடம் உமிழும் பொங்குநீர் - தேர் வேந்தர் எடுத்த வெள்ளிக்குடம் சொரியும் மிகுநீர்; பருதி தன் ஒளி மறைய - ஞாயிற்றின் ஒளி மறையும்படி; பால்மதி சொரியும் தீ கதிர்த் தோற்றம் ஒத்த - பால் போன்ற திங்கள் பொழியும் இனிய கதிரின் தோற்றம் போன்றன.
|
(வி - ம்.) திருவ : அ : அசை. வெண்பொன் : வெள்ளி.
|
மன்னவன் : சீவகன். பருதி - ஞாயிறு; சீவகனுக்குவமை. மதி சொரியும் தீங்கதிர் - வெள்ளிக்குடத்து நீர்க்குவமை.
|
( 42 ) |
2420 |
துளங்கு மாமணித் தூண்க ணான்கினால் | |
|
விளங்கு வெள்ளிவேய்ந் தாய்ந்த மாலைசூழ் | |
|
வளங்கொண் மாமணிக் கூடஞ் சோ்த்தினா | |
|
ரிளங்க திர்கொலோ விருந்த தென்னவே. | |
|
(இ - ள்.) துளங்கும் மாமணித் தூண்கள் நான்கினால் விளங்கு - ஒளி அசையும் பெரிய மணித் தூண்கள் நான்கினால் விளங்குகின்ற; வெள்ளி வேய்ந்து ஆய்ந்த மாலைசூழ் - வெள்ளியால் வேயப்பெற்று ஆராய்ந்த மாலை சூழ்ந்த; வளம்கொள் மாமணிக் கூடம் - வளம் கொண்ட மாமணிக் கூடத்திலே; இருந்தது இளங்கதிர் கொலோ என்ன சேர்த்தினார் - இருந்தது. இளஞாயிறோ என்னும்படி சென்றிருக்கப் பண்ணினார்.
|