முத்தி இலம்பகம் |
1370 |
|
|
2426 |
தாவி றாழ்வடந் தயங்க நீருறீஇ | |
|
மேலி யச்சுதந் தெளித்த பின்விரைந் | |
|
தாவி யம்புகை சுழற்றி யாடியும் | |
|
வீவில் வெஞ்சுடர் விளக்குங் காட்டினார். | |
|
(இ - ள்.) தாஇல் தாழ்வடம் தயங்க - குற்றமற்ற நீண்ட வடம் விளங்க; விரைந்து மேவி அச்சுதம் நீர் உறீஇத் தெளித்த பின் - விரைந்து வந்து, அச்சுதத்தை நீரிலே உறுத்தித் தெளித்த பின்றை; ஆவி அம்புகை சுழற்றி - புகைக் கலத்திலே வாய் விட்ட புகையைச் சுழற்றி; ஆடியும் வீவுஇல் வெஞ்சுடர் விளக்கும் காட்டினார் - கண்ணாடியையும் கெடாத வெவ்விய சுடரையுடைய விளக்கையுங் காட்டினார்.
|
(வி - ம்.) ஆவி அம்புகை : வினைத்தொகை. இவை காட்டல் இயல்பு.
|
தா - குற்றம். தயங்க - விளங்க. அச்சுதம் - அரிசி. ஆவி - ஆவித்த; வாய்விட்ட, ஆடி - கண்ணாடி. வீவு - அவிதல்.
|
( 49 ) |
2427 |
உவரி மாக்கட லொல்லென் வெண்டிரை | |
|
யிவரி யெழுவபோன் றிலங்கு வெண்மயிர்க் | |
|
கவரித் தொகைபல வீசுங் காவல் | |
|
ரிவரித் தொகையென்ப தின்றி யாயினார். | |
|
(இ - ள்.) உவரி மாக்கடல் ஒல்லென் வெண்திரை இவரி எழுவ போன்று - உவர் நீரையுடைய பெரிய கடலில் ஒல்லென்றிசைக்கும் வெள்ளிய அலைகள் பரந்து எழுவன போன்று; இலங்கு வெண்மயிர்க் கவரித் தொகைபல வீசும் காவலர் - விளங்கும் வெண்மயிர்க் கவரியின் தொகை பல வீசுகின்ற காவலர்; இவர் இத்தொகை என்பது இன்றி ஆயினார் - இவர்கள் இத்தொகையர் என்பது இன்றித் திரண்டனர்.
|
(வி - ம்.) கவரி என்பது மானின் பெயராய் அதன் மயிரைக் குறித்தமையால் முதல் ஆகுபெயர்; 'வெண்மயிர் என்பது கவரிக்கு அடை ஆகையால் அடையெடுத்த ஆகுபெயர். 'இத் தொகையர்' எனற்பாலது 'இத்தொகை என வந்தது செய்யுள் விகாரம்.
|
( 50 ) |
2428 |
அறுகு வெண்மல ரளாய வாசநீ | |
|
ரிறைவன் சேவடி கழுவி யேந்திய | |
|
மறுவின் மங்கலங் காட்டி னார்மணக் | |
|
குறைவில் கைவினைக் கோல மார்ந்ததே. | |
|
(இ - ள்.) அறுகு வெண்மலர் அளாய வாசநீர் - அறுகையும் மலரையும் கலந்த நறுமண நீராலே; இறைவன் சேவடி
|