முத்தி இலம்பகம் |
1371 |
|
|
கழுவி - இறைவன் அடியைக் கழுவி; ஏந்திய மறுஇல் மங்கலம் காட்டினார் - எடுத்த எண் மங்கலங்களையும் காட்டினார்; குறைவு இல் கைவினை மணக்கோலம் ஆர்ந்தது - (அப்போது) குற்றமில்லாத கைவினையையுடைய மணக்கோலம் நிறைவேறியது.
|
(வி - ம்.) அளாய் - கலந்து, இறைவன்; அருகக்கடவுள் மங்கலம் - அட்டமங்கலம். குறைவில் கைவினை மணக்கோலம் என மாறுக.
|
( 51 ) |
வேறு
|
2429 |
ஊனிமிர் கதிர்வெள்வே லுறைகழித் தனபோலுந் | |
|
தேனிமிர் குவளைக்கட் டிருமக் ளனையாளைப் | |
|
பானிமிர் கதிர்வெள்ளி மணைமிசைப் பலர்வாழ்த்தி | |
|
வானிமிர் கொடியன்னார் மணியணை மிசைவைத்தார். | |
|
(இ - ள்.) ஊன் நிமிர் கதிர் வெள்வேல் உறைகழித்தன் போலும் - ஊனிலே வளர்ந்த ஒளியுறு வேலை உறைகழித்தவற்றை ஒக்கும்; தேன் இமிர் குவளைக்கண் திருமகள் அனையாளை - வண்டுகள் முரலும் குவளைமலர் போன்ற கண்களையுடைய, திருமகள் போன்ற இலக்கணையை; வான்நிமிர் கொடி அன்னார் பலர் வாழ்த்தி - முகிலிலே பரந்த மின்னுக்கொடி போன்ற பலரும் வாழ்த்தி; பால்நிமிர் கதிர் வெள்ளி மணை மிசை மணியணை மிசை வைத்தார் - பால்போலப் பரந்த கதிர்களையுடைய வெள்ளி மணையின்மேல் இட்ட அழகிய அணையின்மேல் இருத்தினர்.
|
(வி - ம்.) உறை கழித்த வெள்வேல் என்றவாறு. வேல் கண், குவளைக்கண் என இயைக்க. திருமகள் அனையாள் - ஈண்டிலக்கணை. பால்போலப் பரந்த கதிரையுடைய என்க. வானிமிர்கொடி - காமவல்லி. மணைமிசை மணியணைமிசை என இயைக்க.
|
( 52 ) |
2430 |
வரைவிளை வளர்பொன்னே வலம்புரி யொருமணியே | |
|
திரைவிளை யமிர்தம்மே திருவிழை யெனவேத்தி | |
|
வரிவளை முழவிம்ம மணிகிள ரொலியைம்பா | |
|
லரைவிளை கலைநல்லா ரறுகினெய் யணிந்தனரே. | |
|
(இ - ள்.) அரைவிளை கலைநல்லார் - அரசியல் முற்றுப் பெற்ற நூற்கலையை வல்ல மகளிர்; திருவிழை - அழகிய இழையணிந்த இவள்; வரைவிளை வளர் பொன்னே! - மலையில் விளைந்த வளர்ந்த பொன்னே!; வலம்புரி ஒரு மணியே! - வலம்புரி யீன்ற ஒப்பற்ற முத்தே!; திரைவிளை அமிர்தமே! - கடலில் விளைந்த அமிர்தமே!; என ஏத்தி - என்று புகழ்ந்து; வரைவிளை முழ விம்ம - மலையில் விளைந்த முழவு ஒலிக்க; மணிகிளர் ஒலி ஐம்பால் - நீலமணிபோல் விளங்கும் அவளுடைய ஐம்பாலிலே!
|