முத்தி இலம்பகம் |
1372 |
|
|
அறுகின் நெய் அணிந்தனர் - அறுகம் புல்லால் நெய்யை அணிந்தனர்.
|
(வி - ம்.) ஏகாரம்: தேற்றம். 'திருவிழைக' என்று பாடமாயின். ஏகாரங்களை விளியாக்கி நின்னைத் திருவிரும்புக என்க. அரசு என்னும் பண்புப் பெயர். 'அரை' என்று பண்பு மாத்திரையை விளக்கிற்றென்பர் நச்சினார்க்கினியர்.
|
( 53 ) |
2431 |
கள்ளவிழ் கமழ்கோதைக் காவலன் றிருமகளை | |
|
வெள்ளணி மதயானை விழுமணிக் குடமேற்றித் | |
|
தௌ்ளறன் மண்ணுந்நீ ராட்டினர் தேமலர்மே | |
|
லொள்ளிழை யவளொத்தா ளுருவநுண் ணுசுப்பின்னாள். | |
|
(இ - ள்.) வெள்ளணி மதயானை விழுமணிக் குடம் ஏற்றி - வெள்ளணி அணிந்த மதயானைகள் இரண்டின்மேற் சிறந்த மணிக்குடங்களை ஏற்றி; தௌ்அறல் மண்ணுநீர் - தெளிந்த அற்று வந்த மஞ்சன நீரைக் கொண்டு; கள் அவிழ் கமழ்கோதைக் காவலன் திருமகளை - தேன் விரிந்த மணமலர்க் கோதை அணிந்த காவலனின் திருமகளை; ஆட்டினர் - ஆட்டினர்; உருவநுண் நுசிப்பினாள் - அழகிய நுண்ணிடையாளாகிய அவள்; தேன் மலர்மேல் ஒள்ளிழையவள் ஒத்தாள் - தேனையுடைய மலர்மேல் வாழும் ஒள்ளிய அணிகளை அணிந்த திருமகளைப் போன்றாள்.
|
(வி - ம்.) இருபக்கமும் யானைகளை நிறுத்தி அவற்றின் மேலிருந்து நீராலே ஆட்டுதலின் திருமகளைப் போன்றாள். திருமகளின் இருபக்கமும் யானைகள் இருக்குமென்பர்.
|
( 54 ) |
2432 |
வான்மலர் நுரைசூடி மணியணி கலன்சிந்தாத் | |
|
தானிள மணலெக்கர்த் தவழ்கதிர் மணியார | |
|
மேனைய நறுஞ்சுண்ணங் குங்கும மிடுங்களியாத் | |
|
தேனின் மிசைபாடத் தீம்புன னடந்தஃதே. | |
|
(இ - ள்.) இள மணல் எக்கர்த் தவழ்கதிர் மணி ஆரம் - இளமணலால் இடும் எக்கராக ஒளி தவழும் மணியையும் ஆர்த்தையும் கொண்டு; ஏனைய நறுஞ்சுண்ணம் குங்குமம் இடும் களி ஆ - ஏனையவாகிய நறிய சுண்ணமும் குங்குமமும் வண்டலாகக் கொண்டு; வான்மலர் நுரைசூடி - சிறந்த மலராகிய நுரையைச் சூடி; அணிகலன் மணிசிந்தா - பூண்களிலுள்ள மணியை மணியாகச் சிந்தி; தேன் இனம் இசைபாட - தேன் கூட்டம் பண்ணிசைக்க; தீம்புனல் நடந்தது - (அவராட்டிய) நறுநீர் நடந்தது.
|
(வி - ம்.) தான் : அசை.
|
வான் - சிறந்த. மலராகிய நுரையைச் சூடி என்க. சிந்தா - சிந்தி. இளமணலாலிடும் எக்கராக என்க. இடுங்களியர் - இடாநின்ற வண்டலாக. நடந்ததே என்பது நடந்தஃதே என விரித்தல் விகாரம் பெற்றது.
|
( 55 ) |