முத்தி இலம்பகம் |
1374 |
|
|
(இ - ள்.) அவ்வளை அவிர் ஆழிக் கால் பொலிந்து - அழகிய வளைந்த விளங்கும் விரல் மோதிரமுடைய கால் பொலிவுற்று; அழகு ஆர்ந்த மைவிளை கழுநீர்க்கண் விலாசியும் - அழகு பொருந்திய நீலோற்பலம் போலும் கண்களையுடைய விலாசியும்; மணி அல்குல் கைவளை அலங்கார மாலையும் - மணி புனைந்த அல்குலையும் கைவளையையும் உடைய அலங்கார மாலையும்; கமழ் கோதை நைவளம் மிகுசாயல் நங்கையைப் புனைகின்றார் - மணமுறும் கோதையையும் நட்ட பாடையினும் மிக்க மெல்லிய மொழியையும் உடைய இலக்கணையை ஒப்பனை செய்கின்றார்.
|
(வி - ம்.) மைவிளை கழுநீர் - நீலோற்பலம்.
|
அ + வளை - அழகிய வளையல். அவிராழி : வினைத்தொகை. மை - கருமை. விலாசி, அலங்காரமாலை என்போர் இலக்கணையின் தோழியர். நைவளம் - ஒரு பண். புனைதல் - ஒப்பனை செய்தல்.
|
( 58 ) |
2436 |
யானையு ளரசன்றன் னணிகிளர் வலமருப்பீர்ந் | |
|
தூனமி லொளிர்செம்பொன் பதித்தொளி மணியழுத்தி | |
|
வான்மண முறச்செய்த மங்கல மணிச்சீப்புத் | |
|
தான்முகில் கழிமதிபோற் றன்னுறை நீக்கினளே. | |
|
(இ - ள்.) யானையுள் அரசன் தன் அணிகிளர் வலமருப்பு ஈர்ந்து - களிறுகளில் அரசனுடைய அழகு பொருந்திய வலக்கொம்பை அறுத்து; ஊனம் இல் ஒளிர் செம்பொன் பதித்து - குற்றமற்ற ஒளிவிடும் செம்பொனைப் பதித்து; ஒளிமணி அழுத்தி - ஒளிவீசும் மணிகளை அழுத்தி; வான்மணம் உறச்செய்த மங்கல மணிச் சீப்பு - சிறந்த மணம் தங்கச் செய்த மங்கலம் பொருந்திய மணிச் சீப்பை; முகில்கழி மதிபோல் தன் உறை நீக்கினள் - முகிலின்றும் நீங்கும் மதிபோல் அதன் உறையினின்றும் விலாசி நீக்கினாள்.
|
(வி - ம்.) யானையுளரசன் - யூகநாதன், ஈர்ந்து அரிந்து. ஊனம் - குற்றம். உறைக்கு முகிலும், சீப்பிற்குத் திங்களும் உவமை.
|
( 59 ) |
வேறு
|
2437 |
மைந்நூற் றனைய மாவீ ழோதி | |
|
வகுத்துந் தொகுத்தும் விரித்துங் | |
|
கைந்நூற் றிறத்திற் கலப்ப வாரிக் | |
|
கமழு நானக் கலவை | |
|
யைந்நூற் றிறத்தின் னகிலின் னாவி | |
|
யளைந்து கமழ வூட்டி | |
|
யெந்நூற் றிறமு முணர்வா ளெழிலேற் | |
|
றிமிலின் னேற்ப முடித்தாள். | |
|