பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1375 

   (இ - ள்.) எந் நூல் திறமும் உணர்வாள் - எந்த நூலின் திறனையும் உண்ர்வாளாகிய விலாசி;மைநூற்று அனைய மாவீழ் ஓதி - இருளை நூற்றாற் போன்ற வண்டுவீழ் ஓதியை; வகுத்தும் தொகுத்தும் விரித்தும் - வகுத்தும் தொகுத்தும் விரித்தும்; கைநூல் திறத்தின் கலப்ப வாரி - தன் கையாலே நூல் திறத்திலே கலப்ப வாரி; கமழும் நானக் கலவை மணக்குங் கத்தூரிக் கலவையையும்; ஆகிலின் ஆவி - அகிற் புகையையும்; கமழ - கமழும்படி; ஐந்நூல் திறத்தின் அளைந்து ஊட்டி - வியக்கத்தக்க நூல் முறைப்படி; ஐந்நூல் திறத்தின் அளைந்து ஊட்டி; எழில் ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள் - அழகிய எருத்தினுடைய இமில்போல முகத்துக் கேற்ப முடித்தாள்.

   (வி - ம்.) கையால் முடித்தாள். குழலையும் அளகத்தையும் வகுத்தும், கொண்டையத் தொகுத்தும், பனிச்சையையும் துஞ்சையையும் விரித்தும் முடித்தாள்.

( 60 )
2438 கரும்புந் தேனும் மமிழ்தும் பாலுங்
  கலந்த தீஞ்சொன் மடவாட்
கரும்பும் மிலையு மயக்கி யாய்ந்த
  முல்லைச் சூட்டு மிலைச்சித்
திருந்து திங்கள் சூழ்ந்த மின்னிற்
  செம்பொற் பட்டஞ் சோ்த்தி
விரும்பும் முத்தம் மாலை நான்ற
  விழுப்பொன் மகரஞ் செறிந்தாள்.

   (இ - ள்.) கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீஞ்சொல் மடவாட்கு - கரும்பையுந் தேனையும் அமிழ்தையும் பாலையும் கலந்த இனிய மொழியை உடைய இலக்கணைக்கு; திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி - திருந்திய திங்களை சூழ்ந்த மின்போல செம்பொன்னாலான பட்டத்தை அணிந்து; அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லைச் சூட்டு மிலைச்சி - அரும்பையும் இலையையும் இடையிட்டுக் கட்டின முல்லைச் சூட்டைக் கற்புக்குச் சூட்டி; விரும்பும் முத்தமாலை நான்ற விழுப்பொன் மகரம் செறித்தாள் - விரும்பக் கூடிய முத்தமாலையைத் தொங்கவிட்ட சிறந்த பொன்னாலான மகரவாயான பணியை அணிந்தாள்.

   (வி - ம்.) மடவாள் : இலக்கணை. மயக்கி - இடையிடையே விரவி. முல்லைச்சூட்டு கற்பிற்கறிகுறியாகச் சூடுதல் மரபு. மிலைச்சி - சூட்டி. திங்கள் - நெற்றிக்குவமை. மின் - பட்டத்திற்குவமை. மகரம் - ஓரணிகலன். ”முல்லை சான்ற முல்லையும்” என்றதனால் முல்லை மலர்மாலை கற்பின் சிறந்த அடையாளம் என்பது தெளியப்படும்.

( 61 )