முத்தி இலம்பகம் |
1376 |
|
|
2439 |
கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக் | |
|
கமழ்பூ நெரித்து வாங்கிக் | |
|
கிள்ளை வளைவா ருகிரிற் கிள்ளித் | |
|
திலகந் திகழப் பொறித்துத் | |
|
தௌ்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத் | |
|
திருநீர் நுதலின் னப்பி | |
|
யுள்ளம் பருகி மதர்த்த வாட்கண் | |
|
ணுருவம் மையிற் புனைந்தாள். | |
|
(இ - ள்.) கள்ளும் தேனும் ஒழுகும் - மதுவும் வண்டும் சிந்துகின்ற; கமழ் குவளைப்பூ - மணமுறுங் குவளை மலரை; கிள்ளை வளைவாய் உகிரின் கிள்ளி - கிளியின் வளைந்தவாய்போலும் நகத்தாலே கிள்ளி; நெரித்து வாங்கி - (மயிரைக்) கோத்து வாங்கி (அதனுள்ளே); திகழப் பொறித்து - விளங்க வைத்து; தௌ்ளும் மணிசெய் சுண்ணம் திலகம் - தௌ்ளிய மணிச் சுண்ணத்தாலே அமைந்த பொட்டை; இலங்கத் திருநீர் நுதலின் அப்பி - விளங்குமாறு அழகிய தண்மையுடைய நுதலிலே அப்பி; உள்ளம் பருகி மதர்த்த வாள்கண் - கணவனுள்ளத்தைப் பருகிச் செருக்கிய வாள்னைய கண்ணை; உருவம் மையில் புனைந்தாள் - நிறமுடைய மையாலே புனைந்தாள்.
|
(வி - ம்.) பொறித்து - எழுதினாற் போல வைத்து.
|
கள்ளும் என்பதற்கு - களவுகாணும் எனப் பொருள் கூறி கிள்ளையின் வளைவாய்தான் தன் றன்மையைக் கள்ளும் என்றார்; கமழ்தேனும் பொசியும் அளவன்றி ஒழுகும் குவளைப்பூ என்க என்றார் நச்சினார்க்கினியர். வண்டு ஒழுகும் என்றல் மரபன்று என்று கருதி இங்ஙனம் கூறினர். கணவனுள்ளத்தைப் பருகி என்க.
|
( 62 ) |
2440 |
நாகம் மருப்பி னியன்ற தோடுந் | |
|
நலங்கொள் கறவுக் குழையும் | |
|
போக நீக்கிப் பொருவிஃ றிருவில் | |
|
லுமிழ்ந்து மின்னுப் பொழியு | |
|
மேக மாகி யெரியும் மணியின் | |
|
னியன்ற கடிப்பு வாங்கி | |
|
மேக விசும்பிற் றேவர் விழைய | |
|
விளங்கச் சோ்த்தி னாளே. | |
|
(இ - ள்.) நாகம் மருப்பின் இயன்ற தோடும் - யானைத் தந்தத்தால் ஆன தோட்டையும்; நலங்கொள் சுறவுக் குழையும் - அழகுறும் மகரக் குழையையும்; போக நீக்கி - காதினின்றும
|