முத்தி இலம்பகம் |
1377 |
|
|
விலக எடுத்து; மின்னுப் பொழியும் - மின்னானது சொரிகின்ற; பொருஇல் திருவில் உமிழ்ந்து - ஒப்பற்ற திருவில்லைத் தான் உமிழ்ந்து; ஏகம் ஆகி எரியும் மணியின் இயன்ற கடிப்பு வாங்கி - ஒப்பற்றதாகி எரியும் மணியினாற் செய்யப்பட்ட குதம்பையை ஏந்தி; மேகவிசும்பின் தேவர் விழைய - முகிலையுடைய வானில் வாழும் வானவர் விரும்புமாறு; விளங்கச் சேர்த்தினாள் - அவள் விளங்குமாறு அணிந்தாள்.
|
(வி - ம்.) தேவர் : ஈண்டுப் பெண்பண்பை யென்பர் நச்சினார்க்கினியர்.
|
நாகம் மருப்பு - மகரவொற்று வண்ண நோக்கிக் கெடாது நின்றது. நாகம் - யானை. சுறவுக்குழை - மகரக்குழை. இல்திருவில் - லகரம் ஆய்தமாகத் திரிந்தது. மின்னு - மின்னல். கடிப்பு - ஒரு செவியணிகலன். தேவர் - தேவமகளிர்.
|
( 63 ) |
வேறு
|
2441 |
விலங்கரம் பொருத சங்கின் | |
|
வெள்வளை தெளிர்க்கு முன்கை | |
|
நலங்கிளர் பவள நன்பொன் | |
|
விரன்மணி யாழி மின்னக் | |
|
கலந்தின்று பணைத்த தோளுங் | |
|
கவின்வளர் கழுத்து மார்ந்த | |
|
வலம்புரி யீன்ற மூத்த | |
|
மணிநிலா நக்க வன்றே. | |
|
(இ - ள்.) விலங்கு அரம் பொருத சங்கின் வெள்வளை தெளிர்க்கும் முன்கை - வளைந்த வாளரம் அறுத்த சங்கினாலாகிய வெள்ளை வளை ஒலிக்கும் முன்கையில்; நலம்கிளர் பவளம் விரல் நன்பொன் மணி ஆழி மின்ன - அழகு கிளரும் பவளம் போன்ற விரலில் அணிந்த நன்பொன் மணிமோதிரம் மின்ன; கலம் தின்று பணைத்த தோளும் - அணியை அடக்கிப் பருத்த தோளிலும் ; கவின்வளர் கழுத்தும் - அழகு வளரும் கழுத்திலும்; ஆர்ந்த வலம்புரி ஈன்ற முத்தம் அணிந்த, வலம்புரி முத்துக்கள்; மணிநிலா நக்க - அழகிய நிலனைக் கெடுத்தன.
|
(வி - ம்.) சங்கின் : இன் : அசை என்பர் நச்சினார்க்கினியர்.
|
விலங்கு - வளைந்த. அரம் - ஈர்வாள். தெளிர்க்கும் - ஒலிக்கும். பவளவிரல், நன்பொன் மணியாழி என மாறுக, கலம் - அணிகலம். கவின் - அழகு, நக்க - கெடுத்தன.
|
( 64 ) |