| முத்தி இலம்பகம் | 
1379  | 
 | 
  | 
| 
 படுகணை மறந்து - இசையிற் குலவி வண்டு பாடும் தேன் உண்டாகும் மலர்க்கணையை எய்ய மறந்து; கடிய காண்கிலேன் என்னா - இங்ஙனம் கடியன பார்த்திலேன் என்று கருதி; உருகி மெய் கரந்திட்டான் - (மனம்) உருகி இவள் மெய்யிலே மறைந்து வேட்கையை விளைத்திட்டான். 
 | 
| 
    (வி - ம்.) மெய் கரந்திட்டான் என்றது அநங்கனானான் என்றபடி. 
 | 
| 
    சுமக்கலாத நாண் உடைய நங்கை என இயைக்க. பெண்மைப் பண்பு நான்கனுள் நாணமே சிறந்தமை பற்றி அதன் மிகுதி கூறுவார் இங்ஙனம் கூறினர். நகை - ஒளி. சுமக்கலாத பூண் பொன்ஞாண் வடத்தொடு புரள என மாறுக. 
 | 
( 66 ) | 
|  2444 | 
அவாக்கிடந் தகன்ற வல்கு |   |  
|   | 
  லணிகிளர் திருவிற் பூப்பத் |   |  
|   | 
தவாக்கதிர்க் காசு கண்டா |   |  
|   | 
  ராவியைத் தளரச் சூட்டிக் |   |  
|   | 
கவாய்க்கிடந் தணங்கு நாறுங் |   |  
|   | 
  கண்கொளாப் பட்டு டுத்தா |   |  
|   | 
ளுவாக்கதிர்க் திங்க ளம்மென் |   |  
|   | 
  கதிர்விரித் துடுத்த தொத்தாள். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கண்டார் ஆவி தளர - பா£த்தவர் உயிர் சோர்வடைய ; தவாக்கதிர்க் காசு - கெடாத ஒளியையுடைய காசுகள்; அவாக் கிடந்து அகன்ற அல்குல் - அவாவின் தன்மை கிடந்து அகன்ற அல்குலிலே; அணிகிளர் திருவில் பூப்பச் சூட்டி - அழகு விளங்கும் வானவில் போலத் தோன்ற அணிந்து; கவாய்க் கிடந்து அணங்கு நாறும் கண்கொளாப் பட்டு உடுத்தாள் - கவ்விக் கிடந்து தெய்வத் தன்மை தோன்றும் இழைதெரியாத பட்டை உடுத்தவள்; உவாக்கதிர்த் திங்கள் அம் மென்கதிர் விரித்து உடுத்தது ஒத்தாள் - நிறைந்த கதிரையுடைய திங்கள் தன் அழகிய மெல்லிய கதிரை விரித்து உடுத்த தன்மையை ஒத்தாள். 
 | 
| 
    (வி - ம்.) ஆவியை : ஐ : அசை. கண்கொளா - இழை தெரியாத. 'இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம்' (மலைபடு. 561). 'அணிந்தாள்' என்று பாடமாயின், விலாசி அணிந்தாள் என்க. 
 | 
( 67 ) | 
|  2445 | 
இடைச்செறி குறங்கு கௌவிக் |   |  
|   | 
  கிம்புரி யிளக மின்னும் |   |  
|   | 
புடைச்சிறு பரடு புல்லிக் |   |  
|   | 
  கிண்கிணி சிலம்போ டார்ப்ப |   | 
 
 
 |