முத்தி இலம்பகம் |
1381 |
|
|
அ மலர் அடி - அழகிய மலர்போலும் அடி, அணி - அழகு, உகிர் - நகம், விம்மிதம் - வியப்பு, கண்டம் - கழுத்து. அரிவை என்றது இலக்கணையை தெரிவை - அலங்காராமாலை. செம்மலர் - நெற்றிமாலை என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 69 ) |
2447 |
வாண்மதர் மழைக்க ணோக்கி | |
|
வருமுலைத் தடமு நோக்கிக் | |
|
காண்வர வகன்ற வல்குற் | |
|
கண்விருப் புற்று நோக்கிப் | |
|
பாணுவண் டாற்றுங் கோலச் | |
|
சிகழிகைப் படியு நோக்கி | |
|
யாண்விருப் புற்று நின்றா | |
|
ரவ்வளைத் தோளி னாரே. | |
|
(இ - ள்.) வாள் மதர் மழைக்கண் நோக்கி - ஒளிபொருந்திய மதர்த்த மழைக்கண்களைப் பார்த்து; வருமுலைத் தடமும் நோக்கி - வளரும் முலைகளையும் பார்த்து; காண்வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கி - அழகுவரப் பரந்த அல்குலைக் கண்ணால் விருப்புற்றுப் பார்த்து; பாணு வண்டு அரற்றும் கோலச் சிகழிகைப் படியும் நோக்கி - இசையுடைய வண்டுகள் முரலும் அழகிய மயிர் முடியின் அமைப்பையும் நோக்கி; அவ்வளைத் தோளினார் ஆண் விருப்புற்று நின்றார் - அழுகிய வளையணிந்த தொளையுடைய மகளிர் (அவளை நுகர்தற்குரிய) ஆண்மையை விருப்புற்று நின்றனர்.
|
(வி - ம்.) வாள்கண், மதர்க்கண், மழைக்கண் என்க. வருமுலை : வினைத்தொகை காண் - அழகு : காட்சி, பாணு - பண், சிகழிகை - மயிர்முடி.
|
( 70 ) |
வேறு
|
2448 |
தெருள்கலான் படைத்தவன் காணிற் செவ்வனே | |
|
மருள்கலா தவர்களு மருள்வர் மம்மர்நோ | |
|
யிருளிலா ரெங்ஙன முய்வ ரின்னதா | |
|
லருளிலா ரவணல மணிந்த வண்ணமே. | |
|
(இ - ள்.) அருள் இலார் அவள் நலம் அணிந்த வண்ணம் இன்னது - அருளில்லாத மகளிர் இலக்கணையின் அழகை அணிந்த வண்ணம் இவ்வாறு பெண்டிரும் ஆண்மையை விரும்பும் பெற்றியதாயிருந்தது; படைத்தவன் காணின் தெருள் கலான் - இனி, இவளைப் படைத்த நான்முகன் கண்டால் தான் படைத்த வடிவம் எனத் தெளியான்; மருள்கலாதவர்களும் செவ்வனே மருள்வர் - மயங்காத முனிவரும் நேரே மயங்குவர்; மம்மா
|