| முத்தி இலம்பகம் |
1383 |
|
|
| 2451 |
கோமக ளுருவமாய்க் கூற்றம் போந்தது | |
| |
போமினும் முயிருயக் கொண்டு போய்மனங்/span> |
| |
காமின் மெனக்கலை சிலம்பு கிண்கிணி | |
| |
தாமனும் வாயினாற் சாற்று கின்றவே. | |
|
|
(இ - ள்.) கூற்றம் கோமகள் உருவமாய்ப் போந்தது - கூற்று அரசன் மகள் உருவமாய்க் கொல்ல வந்தது; உம் உயிர் உயப் போமின் - நும் உயிரைப் பிழைக்கக் கொண்டு சென்மின்; கொண்டுபோய் மனம் காமின் - கொண்டுபோனாலும் ஆண்டு மனம் வருந்துதலைக் காமின்; எனக் கலை சிலம்பு கிண்கிணி தாம் வாயினால் மனும் சாற்றுசின்ற - என்று கலையுஞ் சிலம்பும் கிண்கிணியும் தம் வாயினாலே மிகவும் சாற்றுகின்றன.
|
|
(வி - ம்.) காமினம் : அம் : அசை, மனும் : மன்னும் என்பதன் விகாரம்.
|
( 74 ) |
| 2452 |
அருளிலா ரிவடம ரன்ன ராயினு | |
| |
முருடிரை யுலகெலா முருளு மின்றெனக்/span> |
| |
கருதின கவரிசாந் தாற்றி வெண்குடை | |
| |
யரிவையை மறைத்தன வால வட்டமே. | |
|
|
(இ - ள்.) இவள் தமர் அருள் இலார் - அணிந்துவிட்ட இவள் தமர் அருளிலாராயிருந்தார்; அன்னர் ஆயினும் - அவர்கள் அத்தன்மையராயினும்; உருள் திரை உலகெலாம் இன்று உருளும் என - உருளும் அலையையுடைய உலகம் எல்லாம் இன்று கெடுமே என்று; கருதின கவரி சாந்தாற்றி வெண்குடை ஆலவட்டம் அரிவையை மறைத்தன - கருதினவாய்க் கவரியும் சாந்தாற்றியும் வெண்குடையும் ஆலவட்டமும் நங்கையை மறைத்தன.
|
|
(வி - ம்.) உலகம் கெடுமென அறிந்தும் இவளை அணிந்துவிட்ட உறவினர் அருளிலராயிருந்தார் என்று கருதினபோல இவை மறைத்தன, இது தற்குறிப்பேற்ற அணி.
|
( 75 ) |
வேறு
|
| 2453 |
கரும்பே தேனே யமிர்தே காமர் மணியாழே | |
| |
யரும்பார் மலர்மே லணங்கே மழலை யன்னம்மே | |
| |
சுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும் | |
| |
பெரும்பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே. | |
|
|
(இ - ள்.) கரும்பே! -; தேனே!-; அமிர்தே!-; காமர் மணியாழே! - விருப்பூட்டும் அழகிய யாழே!; அரும்பு ஆர்மலர்
|